தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆர்வம் ஏற்படலாம். அதன் கொள்ளை அழகுதான் இதற்கு காரணம். ஆனால் இந்த வண்ணத்துபூச்சிகள் எல்லாம் பார்த்தாலே அருவருப்பை ஏற்படுத்தும் கம்பளி பூச்சியிலிருந்து உருவானவை என்றால் நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் 24 ஆயிரம் வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக இதுவரை கண்டறிந்து உள்ளனர். வண்ணத்துப்பூச்சி வெப்ப மண்டல உயிரினமாகும். ஆனாலும் இவை கடும் குளிர் வீசும் இமயமலை மற்றும் கனடாவின் வடபகுதி ஆகியவற்றிலும்கூட காணப்படுகின்றன.

இந்தியா வெப்ப மண்டல பகுதி என்பதாலும், வண்ணத்து பூச்சிகள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதாலும், இந்தியாவில் 1800 வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன. இவை சராசரியாக மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்திலிருந்து 15 கிலோமீட்டர் வேகம்வரை செல்லும். சில வண்ணத்து பூச்சிகள் 50 கிலோமீட்டர் வேகத்தில்கூட பறக்கின்றன. இவை குளிர் இரத்தம் கொண்டவை. இதனால் அவற்றின் உடல் வெப்ப நிலை 86 டிகிரிக்கு மேல் இருந்தால் மட்டுமே பறக்க முடியும். இவற்றுக்கு 2 பெரிய கண்கள் உண்டு. அவற்றில் 6 ஆயிரம் லென்சுகள் உள்ளன. ஆனாலும் இவற்றால் நீண்ட தூரத்துக்கு பார்க்க முடியாது. 10 அடியிலிருந்து 12 அடி தூரம் வரை மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். ஆனால் மனிதனால் பார்க்க முடியாத நிறங்களைக்கூட வண்ணத்து பூச்சிகள் பார்க்கும். மனிதனால் பார்க்க முடியாத புற ஊதா கதிர்நிறத்தையும் வண்ணத்து பூச்சிகளால் பார்க்க முடியும்.

அதற்கு மொத்தம் 6 கால்கள் உண்டு. இருபக்கமும் தலா 3 கால்கள் இருக்கும். இவற்றில் பின்பக்க 4 கால்களை செடிகளில் உட்கார பயன்படுத்தும். முன்னங்கால்களை ஏதாவது பொருட்களை அகற்றுவதற்கு பயன்படுத்தும். உணவின் சுவையை கால்களால்தான் தெரிந்துகொள்ளும். அதன் வாயிலிருந்து நீண்ட குழாய் போன்ற அமைப்பு இருக்கும். இதன்மூலம் மலர்களிலுள்ள தேனை உறிஞ்சி சாப்பிடும். அவற்றிற்கு பற்கள் கிடையாது. எனவே எந்த உணவையும் கடித்து சாப்பிட முடியாது. எதையும் குழாய் மூலம் உறிஞ்சி சாப்பிடும். அதின் முகத்தில் 2 ஆண்டனா போன்ற அமைப்பு உண்டு. இதன்மூலம்தான் உணர்ச்சி, வாசனை போன்றவற்றை அறியும், சத்தங்களையும் உணரும்.

வண்ணத்து பூச்சிகளுக்கு 4 பருவங்கள் உள்ளன. அவை முட்டை பருவம், புழு பருவம், கூட்டுப்புழு பருவம், பூச்சி பருவம். வண்ணத்து பூச்சிகள் செடியின் இலைகள் மற்றும் மரப்பட்டைகளில் முட்டையிடும். அவை அதில் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும். முட்டையிலிருந்து 2 வாரம் மட்டுமே அவை புழுவாக இருக்கும். அதற்குள் 4 தடவை அவற்றின் புற தோலுரிந்து தனி கூடுபோல உருவாகும். அதற்குள் புழு உட்கார்ந்து கொள்ளும். சில புழுக்கள் நூல்களை வெளிப்படுத்தி கூட்டை தானாக உருவாக்கும். இதற்குள் புழுக்கள் இருக்கும் காலம் கூட்டுப்புழு பருவமாகும். அந்த நேரத்தில் அவை வண்ணத்து பூச்சிகளாக உருமாறும். பின்னர் அவை கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும். அவை அவ்வாறு உருமாறி வெளியே வருவதற்கு கால நிர்ணயம் கிடையாது. சில நாட்களிலும் இது நடக்கலாம், சில மாதங்களிலும் நடக்கலாம் அல்லது ஒரு ஆண்டுகூட நீடிக்கலாம்.

கூட்டுப்புழுவாக இருந்து கண்கவரும் வண்ணத்துப்பூச்சியாக அது எவ்வாறு மாறுகிறதென்று யாருக்கும் தெரியாத மர்மமாகும். இவ்வாறு அவைகள் உருமாற சிருஷ்டித்தவன் யார்? அவனே இறைவன்! இதேவிதமாகத்தான் கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை நம்பி பின்பற்றுகிறவர்களுக்கு அவர் சாகாமையை வாக்களித்துள்ளார். அதாவது ஐம்புலன்களை உடைய ஒருவன் தெய்வத்தன்மை கொண்ட தெய்வீக உடலை அடைகின்றான். இதற்கு சான்றாக வண்ணத்துப்பூச்சியை இறைவன் சிருஷ்டித்துள்ளார். வண்ணத்துப்பூச்சியை பார்த்து நம் சரீரம்கூட மாற முடியுமென்ற நம்பிக்கையை பெறுவோம்.

✡✡✡✡✡✡✡

Filed under: பத்திரிகை செய்திகள்