தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » சாந்தியளிக்கும் ஆன்மீகம்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

மத சம்பந்தமான புஸ்தகத்திற்கு மாறாக, ஒருவர் தனது கருத்தை கூறினால் அது ஒரு மதமல்ல. பகவத்கீதையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பகவத்கீதையை படித்தீர்கள் என்றால் அதில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை அதிகாரம் 7:3-ல் ஆயிரம் பேர் யோகா செய்கிறார்கள், அதில் மிகவும் அபூர்வமாக ஒருவனே சாந்தி அடைகிறான்”என்று கூறுகிறார். இன்றைக்கு, எல்லோரும் யோகாவைப் பற்றி பேசுகிறார்கள். நான்கூட 6 வருடங்களாக ஒரு யோகியாக இருந்தேன். ஆனால் சாந்தியை ஒருபோதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அநேகர் யோகா பயிற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆயிரம் பேரில் ஒருவனே சாந்தியைப் பெற்றுக்கொள்கிறான் என்பது சரிதான். மீதமுள்ள 999 பேர்களின் விதி என்ன? நீங்கள் மத சம்பந்தமான நூல்களைப் படித்து அந்த நூல்கள் கூறியபடி நடக்க வேண்டும்.

இறைவன் ஒவ்வொரு மத சம்பந்தமான புஸ்தகங்கள் மூலமாக கிரியை செய்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் அவர்களுடைய புஸ்தகங்கள் மூலமாக கிரியை நடப்பிக்கிறார். ஒருவன் விவிலியம் கூறியபடி செய்யவில்லையென்றால், அவனிடம் பரிசுத்த ஆவி இல்லை. விவிலியம் கூறியபடி பிரசங்கிப்பவனே ஒரு கிறிஸ்தவனாவான். உலகம் உங்களை புகழ்ந்தால், நீங்கள் ஒரு பிசாசாவீர்கள். பல்கலைக்கழகங்களை நீங்கள் கட்டலாம், பெரிய பெரிய கோபுரங்களை நீங்கள் கட்டலாம், ஆனால் இவையெல்லாம் மக்களை வஞ்சிப்பதற்காகவே செய்யப்படுகிறது. ஆகவே பிரார்த்தனையானது இருதயத்திலிருந்தே வருகிறதேயன்றி கோபுரங்கள் வழியாக அல்ல. இயேசு ஒருபோதும் கட்டிடத்தையோ, பல்கலைக்கழகத்தையோ கட்டவில்லை. அவர் பள்ளிக்கூடங்களையும் ஒருபோதும் கட்டவில்லை. அந்த மனிதன் உலகத்தை எப்படி அசைத்தார்? மனிதர்கள் மருத்துவமனைகளையும், பெரிய பெரிய பல்கலைக்கழகத்தையும் கட்டுகிறார்கள்.

ஆபிரகாம் லிங்கன், “நீங்கள் எல்லாரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது” என்று கூறினார். கிறிஸ்தவ மதத்தில் மாத்திரமே ஜீவன் உண்டு அல்லது நீங்கள் அமெரிக்காவுக்கு செல்லுங்கள் என்று கூறி, இன்றைக்கு ஜனங்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. அமெரிக்கர்கள் “நாங்கள் உங்களுக்குப் பணம் கொடுப்போம், ஆனால் நீங்கள் எங்களுக்கு கீழே இருக்க வேண்டும். உங்கள் தேசத்திற்கு எதிராக நீங்கள் வர வேண்டும். நாங்கள் என்ன சொல்லுகிறோமோ அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆகவே அநேகர் அங்கு செல்லுகிறார்கள். இங்கே அவர்களுக்கு உண்பதற்கு எந்த உணவும் இல்லை. அங்கிருந்து ஏராளமான பணத்தைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் ! கர்த்தருக்கு ஸ்தோத்திரம், என்று கூறிக்கொண்டு தனவான்களாக மாறுகிறார்கள்.

இன்றைக்கு நம்முடைய தேசம் மகத்தான கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் தேசமாகும். கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள, நீங்கள் இந்துக்களிடம் செல்ல வேண்டும். மேலும் மேலை நாட்டிலிருந்து என்ன கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளுகிறீர்கள்? இன்று அநேக மக்கள் நாம் மேலை நாடுகளுக்குச் சென்று அந்த கலாச்சாரத்தை இறக்குமதி செய்யலாம் என்று நினைக்கிறார்கள். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள பத்து கட்டளைகளை இன்றுவரையிலும் யாரும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்துக்கள் அதை நிறைவேற்றுகிறார்கள். “உன்னுடைய தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு” என்ற கட்டளை எதுவும் இல்லாதபோதிலும், இந்துக்கள் அதை கடைபிடிப்பதை நம்மால் காண முடிகிறது நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது. இன்றைக்கு இந்த தேசத்தில் ஒரு சிறு பிள்ளையை நீங்கள் ஏமாற்ற முடியாது. அநேக வருடங்களுக்கு முன்னே, நீங்கள் அநேக மக்களை ஏமாற்றியிருக்கக்கூடும். ஆனால் இன்று எல்லாருடைய கண்களும் திறக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ஒரு சிறு குழந்தையைக்கூட நீங்கள் ஏமாற்ற முடியாது. இறைவன் உங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்திருக்கிறார். உங்களுக்கு சமாதானம் இல்லையென்றால் இறைவனிடம் வாருங்கள். அநேக மக்கள் ஒவ்வொரு மதமும் வேறுபட்டது என்று நினைக்கிறார்கள். மேலும் அங்கு அநேக நாமங்கள் இருக்கின்றன. எதற்காக அநேக நாமங்கள் தோன்றின என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தொடரும்….

J. பாலசந்தர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கட்டுரைகள்