தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » சங்கைமிக்க குர்-ஆன்

சங்கைமிக்க குர்-ஆன்

 

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா-2

வச. 37: பின்னர் ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக்கொண்டார்; அவற்றைக் கொண்டு அவனிடம் மன்னிப்புக்கோரினார். அதனால் அல்லாஹ் அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவனே தவ்பாக்களை மிகுதியாக ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன்.

வச. 38: நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு மறுமையின் காரியங்களில் யாதொரு பயமுமில்லை; மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.”

வச. 39: இன்னும், நிராகரித்து விட்டு, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டுமிருக்கிறார்களே அத்தகையோர் – அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்கள்.

வச. 130-133: மேலும், தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெளிவுசெய்தோம்; நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார்.

அவருக்கு அவருடைய இரட்சகன், “நீர் எனக்குக் கீழ்ப்படியும்!” எனக் கூறியபோது அவர் “அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்” எனக் கூறினார்.

இதையே இப்றாஹீம் தன் மக்களுக்கு உபதேசமும் (வஸிய்யத்தும்) செய்தார். யஃகூபும் இவ்வாறே உபதேசம் செய்தார். என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான்; ஆகவே, நீங்கள் முஸ்லீம்களாக முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் என அவர்கள் கூறினர்.

அல்லது யஃபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே! அவரருகில்) நீங்கள் பிரசன்னமாகியிருந்தீர்களா? அவர் தம் மைந்தர்களிடம், “எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உம்முடைய வணக்கத்திற்குரியவனும், உம்முடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனையே நாங்கள் வணங்குவோம்; அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக)வும் இருப்போம்” என்று கூறினார்கள்.

– தொடரும்…

*******

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்