தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » சங்கைமிக்க குர்-ஆன் – 2

சங்கைமிக்க குர்-ஆன் – 2

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா-21

வச.66-71: “கொஞ்சமும் உங்களுக்கு நன்மை செய்யாத, உங்களுக்குத் தீமையும் செய்யாத, அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று இப்ராஹீமாகிய அவர் கேட்டார். “சீச்சீ”  உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைகளுக்கும் நாசம்தான் நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?” என்று கூறினார்.

அதற்கவர்கள், “நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால், இவரை நெருப்பிலிட்டு எரியுங்கள்; அதன்மூலம் உங்கள் வணக்கத்திற்குரிய தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று தங்களைச் சார்ந்தோரிடம் கூறினார்கள்.

அவர்கள், இப்ராஹீமை நெருப்புக்கிடங்கில் எறியவே, “நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக்கூடியதாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம்.

மேலும், அவர்கள், அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள்; நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாகச் செய்துவிட்டோம். நாம் அவரையும், லூத்தையும் அகிலத்தார்க்கு நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸின்) பால் வரச்செய்து ஈடேற்றம் பெறச் செய்தோம்

✡✡✡✡✡✡✡

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்