தமிழ் | తెలుగు

» கவிதைகள் » சங்கமம்

சங்கமம்

முக்கூடலில் சங்கமம்
முக்கடலும் சங்கமம்
மும்மதங்களும் சங்கமம்
மும்மூர்த்திகளும் சங்கமம்!

சத்திய நகரத்தில் சங்கமம்
சத்தியமே ஜெயத்தில் சங்கமம்
சமய சகோதர சாத்வீக சங்கமம்
சந்ததி சகித சங்கமம்!

லஹரி கிருஷ்ணாவில் சங்கமம்
லட்சோப லட்ச மக்கள் சங்கமம்
லட்ச ஒளியில் சங்கமம்
லயித்துப் போய் நிற்பவர் சங்கமம்!

உபன்யாச சங்கமம்
உலகை உய்விக்க சங்கமம்
உறவை வளர்க்க சங்கமம்
உயிர் வாழ உரமிட்டவருக்கே சங்கமம்!

– R. தங்கவேல், 
ஓய்வுபெற்ற  இரயில்வே நிலைய மேலாளர்,
திருநெல்வேலி.

*******

Filed under: கவிதைகள்