தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » கோடைகால விடுமுறை முகாம் – 2015

கோடைகால விடுமுறை முகாம் – 2015

கோடைகால விடுமுறை முகாம் – 2015

இறைவனின் பிள்ளைகளாகிய நமக்குள் எந்த ஜாதி, மத, இன, மொழி பேதமில்லாமல், ஒற்றுமை உணர்வினை வளர்க்கும் பயிற்சி கூடமாகிய மனுஜோதி ஆசிரமத்தில், ஒவ்வொரு வருடமும் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மனுஜோதி ஆசிரமத்திலும், ஆந்திர மாநிலத்திலுள்ள அசரடாவிலும் கோடைகால விடுமுறை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அநேக மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு அநேக பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

பயிற்சி நாட்களில் அதிகாலை 4.50 முதல் 6.00 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். 6.30 முதல் 7.00 மணி வரை யோகாப்பியாச பயிற்சி, அதன்பின்னர் காலை உணவு. 8.30 மணி முதல் 9.30 மணி வரை உடல் உழைப்பு. 10.00 மணி முதல் 1.00 மணி வரை வேத ஆராய்ச்சி வகுப்புகள் நடைபெற்றன. மதிய உணவுக்குப்பின் 2 மணி முதல் 4 மணி வரை ஓய்வு. 4 மணி முதல் 5 மணி வரை விளையாட்டு. மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை. இரவு உணவுக்குப் பின் 9.00 மணி வரை பக்திப் படம் காண்பிக்கப்பட்டது. 9.00 மணி முதல் 11.00 மணி வரை பஜனை நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ மாணவியர்களும் உற்சாகத்துடனும், ஆர்வமுடனும் கலந்துகொண்டு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர்.

பள்ளி சிறுவர், சிறுமியர்கள் புரிந்துகொள்ளும் வகையில் தேசீய ஒருமைப்பாடு, வேதங்களிலிருந்து கேள்வி-பதில்கள், பெற்றோர்களுக்கு கீழ்ப்படிதல், இறை வழிபாடு மற்றும் சரீர ஆரோக்கியத்திற்காக யோகாசன பயிற்சி, சரீரத்தையும், மனதையும் எவ்வாறு தூய்மையாக வைப்பது போன்றவற்றையும் கற்றுச்சென்றனர். மனுஜோதி ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் சீடர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தினர். கடலூரைச் சேர்ந்த தவத்திரு. அன்பிற்கரசு சுவாமி அவர்கள் மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு ஆன்மீக வகுப்புகள் நடத்தினார்கள். மாணவ, மாணவியர் தங்கள் நோட்டுகளில் குறிப்பு எடுத்துக்கொண்டனர்.

மனுஜோதி ஆசிரமத்தில், மே 21-ம் தேதியன்று தேர்வும், மே 22-ம் தேதியன்று விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. இதிலே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மே 24-ம் தேதி அன்று விடுமுறை முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மனுஜோதி ஆசிரமத்தில் இந்த 21 நாட்களுமே சித்திரை வெயிலின் தாக்கமில்லாமல் குளிர்ந்த சூழ்நிலையே நிழவியது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை, கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவியர் மற்றும் அனைவருமே உணர்ந்தோம்.

*******

Filed under: ஆன்மீக கருத்து