தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » கீதாஞ்சலி

கீதாஞ்சலி

(2014-ம் ஆண்டு மே ஜூலை இதழில் துவங்கப்பட்ட இக்கட்டுரை இந்த இதழில் நிறைவடைகிறது).

இந்திய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதை தொகுப்பு கீதாஞ்சலியாகும். இதை அவர் வங்காள மொழியில் எழுதினார். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கீதாஞ்சலி என்ற படைப்பில் 103 கவிதைகள் உள்ளது. ஒரு பன்முக தன்மை வாய்ந்த ஆளுமை, தாகூருக்கு இயற்கையாகவே அமைந்தது. 1913-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். அவரது அசைக்க முடியாத பக்தி கீதாஞ்சலியின் உரை நடை வசனங்களில் கைப்பற்றபட்டுள்ளன.

கீதாஞ்சலி நான்கு அடிப்படை தலைப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.

1) கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்புகள். 2) கடவுளுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்புகள். 3) இயற்கைக்கும், மனிதனுக்குமுள்ள தொடர்புகள்.

4) ஆத்மாவிற்கும், மனித சமுதாயத்திற்குமுள்ள தொடர்புகள்.

கீதாஞ்சலிஎனும் தொடரை நிறைவு செய்யும் வேளையில் மீதமுள்ள சிறந்த பாடல்களை காண்போம்.

நீ என்னை முடிவில்லாதவனாக படைத்திருக்கிறாய்”. இறைவன் ஒருவருக்கே முதலுமில்லை, முடிவும் இல்லை. ஆனால் நீ என்னை முடிவில்லாதவனாக படைத்திருக்கிறாய் என்று கவிஞர் கூறுகையில் அவருக்கும், இறைவனுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருந்தது, அதினால் அவர் இறைவனில் பாகமாகி இந்த வரிகளை எழுதியுள்ளார்.

அழிவில்லா உன் கரங்கள் தொடும்

பொழுது என் இனிய இருதயம்,

எல்லையிலா இன்பத்தில் மூழ்குகிறது;

பேசமுடியாத பேச்சுக்கள் பிறக்கின்றன”.

இறைவன் ஒரு மனித உருவத்தில் வந்து அவரை தொட்டிருக்கிறார் என்பது இப்பாடலில் புலப்படுகிறது. இத்தகைய பேறு நம்மெல்லாருக்கும் கிட்டக்கூடியது என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இறப்பே இல்லாத தன்மைக்குள் ஐக்கியமாக விரும்புகிறேன்”. இறைவனுடன் ஒன்றர கலக்க அவர் விரும்புவதையும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையும் அவர் முன்பே அறிந்திருந்தார் என்பதை இவ்வரிகளில் அறிகிறோம்.

ஓ! மன்னர் மன்னவா! இவ்வுலகில் என் வேளை முடிந்தவுடன், தன்னந்தனியாக ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாக, உன் எதிரே நிற்கட்டுமா!

இறைவனுடன் கலக்க விரும்புகிறேன் என்று கூறும் கவிஞர் இறைவனை முகமுகமாக காணும்போது, தான் எத்தகைய கொடிய பாவத்தை செய்ததினால் பேச இயலாமல் வாயடைத்து நிற்பேனோ என்பதே அதின் பொருளாகும்.

உலகம் முற்றிலும் புதியதாக படைக்கப்பட்டபோது, எல்லா நட்சத்திரங்களும், முதன் முதலாக, உன்னத பேரொளியில் பிரகாசித்தன. தேவர்கள் வானத்தில் கூடி பெரு மகிழ்ச்சியில் பாடினார்கள்”. “ஓ! என்ன பரிபூரண படைப்பு! பரிசுத்தமான பெருமகிழ்ச்சி”.

இறைவன் தேவர்களைப் படைத்ததை கவிஞர் கண்டிருக்கிறார். சிருஷ்டிப்பின் காலத்திற்கே சென்று தான் கண்டதை எழுதியுள்ளார்.

இறைவன் கலியுகத்தில் அவதரிக்கும்பொழுது தன்னால் பார்க்க நேர்ந்தால், தான் அதிர்ஷ்டசாலி என்றும் அவ்வாறு அவரை காண முடியவில்லை. அதற்கான ஏக்கம்நிலைக்கும் என்கிறார். இதோ அவர் சொந்த வரிகளில் பார்ப்போம். இந்த என் வாழ்வில், உன்னை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காவிட்டால் உன்னை பார்க்கும் காட்சி, எனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்பொழுதும், உறுத்திக்கொண்டேயிருக்கும்”.

முடிவிலா உருவங்கள் கொண்ட

இவ்வுலகு எனும் விளையாட்டு அரங்கில்,

என் விளையாட்டை நான் ஆடிவிட்டேன்.

இங்கு உருவம் இல்லாதவனின் காட்சி

எனக்கு கிடைத்து விட்டது”.

இறைவன் பற்பல உருவங்களில் அவதரித்தார், லீலை புரிந்தார். உருவம் இல்லாதவனை நான் கண்டுகொண்டேன் என்கிறார். இறைவன் அருவமாகவும், உருவமாகவும் திகழ்கிறார் என்ற மாபெரும் உண்மையை கவிஞர் உணர்ந்துள்ளார்.

கீதாஞ்சலி என்ற கவிதை நூல் முழுவதிலும் கவிஞர் இறைவனை வடித்துள்ளார், காண்பிக்க முயற்சி செய்துள்ளார். விவரிக்க முயற்சி செய்துள்ளார் என்பதையும், ஆனால் மக்கள் அவரின் முயற்சியை புரிந்துகொள்ளவில்லை என்பதையும் கீழ்க்கண்ட வரிகளில் அறிகிறோம்.

மக்களிடையே உன்னை நன்றாக தெரியும் என்று தற்பெருமை கொண்டேன். உன் பிம்பத்தை என் பாடல்களில் எல்லாம் அவர்கள் பார்க்கிறார்கள். அவன் யார்?” என்று என்னிடம் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக என்னால் சொல்ல முடியாதுஎன்று அவர்களிடம் சொல்கிறேன். என்னை குறை கூறுகிறார்கள். வெறுப்போடு என்னை உதறிவிட்டு செல்கிறார்கள். அங்கே, நீ புன்னகை பூத்து இதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாய்.

எல்லா பொருள்களையும் சொல்லுங்கள்என்று அவர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ஆ! அவைகளுக்கு என்ன பொருள் என்று யாருக்கு தெரியும்?” அவர்கள் நிந்தித்து, வெறுப்புடன், என்னிடமிருந்து பிரிகின்றார்கள். நீ அங்கே புன்னகை பூத்து அமர்ந்திருக்கிறாய்.

உன் கதைகளையெல்லாம், அழியாத காவியங்களாக, நான் வடித்திருக்கிறேன்”. இறைவனின் சத்தியத்தைதன் கவிதைகளில் எழுதியுள்ளதாக கூறுகிறார்.

இத்தகைய மாபெரும் படைப்பை வாசித்தால் உங்கள் மனம் தூய்மை அடையும் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுவதற்கேற்ப அதை வாசித்து மனதை தூய்மைப்படுத்துவோம்.                                                           – முற்றும்.

Filed under: ஆன்மீக கருத்து