தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » கிழக்கே தோன்றிய மின்னல் – 1

கிழக்கே தோன்றிய மின்னல் – 1

1983, 1986-ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரி மாநிலத்தில் கடவுளின் நற்செய்தி கூட்டங்களை பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா நடத்தினார். இந்த கூட்டங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்த சகோதரி சுசி பேக்கரும், ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரி எல்லா குந்தரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டார்கள். தீர்க்கதரிசி பிரன்ஹாம்தன்னுடைய சொற்பொழிவிலே இயேசு கொல்லப்படவில்லை என்பதை மறைமுகமாக தன் பக்தர்களுக்கு அறிவித்தார்.

கிறிஸ்து 1900 ஆண்டுகளுக்கு முன்பாக சிலுவையில் கொல்லப்பட்டாரா? இல்லை. இந்த கேள்வியை கேட்டதும் அல்லாமல் கிறிஸ்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தம்மை ஜீவ பலியாக அர்ப்பணித்தார் என்று கூறியுள்ளார். இது ஒரு மாபெரும் இரகசியம். பல்வேறு மத போதகர்கள் கடவுள் நிகழ்த்திய இந்த பிரம்ம யக்ஞம் என்னும் ஆதிவேள்வியை இருட்டடித்து  விட்டனர். இதை ஆதியிலே நிகழ்த்தியவர் தான் மனுஷகுமாரனாக அவதரித்த பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இந்த மகா புருஷரை பற்றி சொல்வதற்கு என் நா எழவில்லை. இவர் எந்நேரத்திலும் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்துவார் என தீர்க்கதரிசி பிரன்ஹாம்  கூறியுள்ளார். பூமியில் அவதரித்த ஆதி புருஷரின் கலியுக காரணப் பெயர்தான் மனுஷகுமாரன் அல்லது கல்கி மகா அவதாரம்.

வேதங்களின் நாயகன் இவரே. இவர் தான் கிறிஸ்து இயேசு என்றும் அல்லாஹ் என்றும் ஸ்ரீமந் நாராயணர் என்றும் வேதங்களில் அழைக்கப்படுகிறார். கலியுகம் முடிவடைந்து சத்ய யுகம் ஆரம்ப நிலையில் உள்ளது. இதற்கிடையில் இவர்தான் தாவீதின் குமாரன் என யூதர்களுக்கு தம்மை வெளிப்படுத்தும் காலக்கட்டம் நெருங்கி விட்டது. பூலோக மக்கள் அநேக அழிவைக் காண்பார்கள். அந்நிலையில் தான் மக்கள் இவரை அடையாளம் கண்டு கொள்வர். ஆனால் காலம் கடந்து மக்கள் அழிவிற்கு செல்வார்கள். இந்த வேத இரகசியங்களை இவர் தன்னுடைய சொற்பொழிவில் பக்தர்களுக்கு வெளிப்படுத்தினார்.

இவைதான் 7 இடிமுழக்க இரகசியங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவர் கூறிய வேத இரகசியங்களை ஏற்று நடப்பவர்கள் இக்காலத்தில் மரணமில்லாமல் பெருவாழ்வை பெறுவர். இவர் சொல்லுக்கு கீழ்ப்படியாத கிறிஸ்தவர்கள் அழிவுக்கு உட்படுவார்கள். பிற சமயத்தினர் பல இன்னல்களுக்கு உட்படுவர். அதுமட்டுமல்லாமல்  வாட்டிகனால் பிரசுரிக்கப்பட்ட திருத்தப்பட்ட வேதாகமத்தை படிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை அந்தி கிறிஸ்துவின் வெளியீடு என விமர்சனம் செய்தார். ஜேம்ஸ் மன்னர் மொழிபெயர்த்த வேதாகமத்தை மட்டுமே படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவிலும் பல மாநிலங்களிலிருந்து விசுவாசிகள் மனுஷகுமாரன் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் கொள்கைகளை பின்பற்றினர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரிஸா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், இராஜஸ்தான், குஜராத், பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தனது ஆன்மீக விளக்க கூட்டங்களை பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா நடத்தினார். வட மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களிலிருந்து இன்றும்கூட விசுவாசிகள் ஆசிரமத்திற்கு ஆண்டிற்கு மூன்று முறை  வந்த வண்ணமாகவே உள்ளனர்.

தொடரும்…

*******

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை