தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » கிழக்கே தோன்றிய மின்னல்

கிழக்கே தோன்றிய மின்னல்

பாலாசீர்  லாறி  முத்துக்கிருஷ்ணாவின்  வாழ்க்கை  சரிதை

நீங்கள் இந்த கடைசி கால செய்திகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் மரணத்தை வெல்ல முடியாது என்று கூறினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இந்த செய்திகளால் கிறிஸ்தவ தேவாலயங்களிலிருந்து மனுஷகுமாரனின் பின்னால் வந்த பக்தர்களில் 90 சதவீதத்திற்கு மேல் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பணம், திருமணம் மற்றும் கல்லறை தோட்டத்திற்காக அவர்கள் மீண்டும் அடைக்கலம் தேடி தங்கள் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு திரும்பிச் சென்றனர்.

வேதாகமம், குர்-ஆன், பகவத்கீதை மற்றும் பல வேதங்களிலுள்ள செய்திகளை திரட்டி தீர்க்கதரிசனங்கள் மற்றும் எழுதப்படாத ஏழு இடிமுழக்கச் செய்திகள் என்ற புத்தகங்களை பிரசுரம் செய்து பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா உலகம் முழுவதும் விநியோகித்தார். 1969-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டு காலம் இந்த பணியில் அவர் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இயேசுவின் காலத்தில் அவர் ‘பெயெல்செபூல்’ என்னும் பிசாசின் தலைவன் என்று அழைக்கப்பட்டதைப்போல மனுஷகுமாரன் லாறி முத்துக்கிருஷ்ணாவும் மேற்கத்திய உலகத்தினரால் அந்திக்கிறிஸ்து என்றும், பிசாசின் புதல்வன் என்றும் அழைக்கப்பட்டார். இயேசுவிற்காக அவருடைய சீடர்கள் பன்னிரண்டு பேர் தங்கள் உயிரையும் தர தயாராக இருந்தனர். அதைப்போலவே இடிமுழக்கச் செய்திகளை பின்பற்றிய பக்தர்கள் பலர் பரிசுத்த பவுல் சொன்னதைப்போல மரணமில்லா பெருவாழ்வு அடைய, கடவுளுடைய வார்த்தையின்படி வார்த்தையானவரின் மணவாட்டியாக, மனுஷகுமாரனை பின்பற்ற தயாராக இருக்கிறார்கள்.

பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல கிறிஸ்தவர்கள், கடவுள் வழி நடப்பவர்கள் வாரத்தின் ஏழாவது நாளான சனிக்கிழமையை ஓய்வுநாளாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வுநாளாக அனுசரித்து வருகிறார்கள். இது கடவுளின் ஆணைக்கு புறம்பானது என கிறிஸ்தவ திருச்சபைகளையும், பாதிரிமார்களையும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா குற்றம்சாட்டினார்.

இன்றைய சோதோம் கொமோராவாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனது அழிவிற்கு முன்னால் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாதான் மனுஷகுமாரன் என்று தெரிந்து கொள்ளப்போகிறது. கிறிஸ்தவர்களும் அதனை புரிந்துகொள்ளப் போகிறார்கள். மனுஷகுமாரனை புறக்கணித்ததின் காரணமாக கிறிஸ்தவர்கள் மரணத்திற்கு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.

அதேசமயத்தில் மனுஷகுமாரனின் நற்செய்தியை பூமியிலுள்ள ஒரு கூட்ட மக்கள் பின்பற்றி, மரணமில்லா பெருவாழ்வு பெற்று 1000 ஆண்டுகள் தர்ம யுகத்தில் வாழ்வார்கள். அதுவுமல்லாமல்  புதிய வானம், புதிய பூமியில் பங்கடைவர். இன்னொரு கூட்ட மக்கள் மரணத்தை மேற்கொண்டு மகிமையின் சரீரத்தைப் பெற்று அவருடன் வைகுண்டம் செல்வார்கள். இயேசுவின் காலத்தில் யூதர்களின் கண்கள் குருடாக்கப்பட்டது.  வேற்று சமூக மக்களின் கண்கள் திறக்கப்பட்டன.

– தொடரும்…
– தேவ ஞான சூரியன், இயக்குனர், வேலூர்

✡✡✡✡✡✡✡

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை