தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » கிழக்கே தோன்றிய மின்னல் – 5

கிழக்கே தோன்றிய மின்னல் – 5

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மக்களின் நலனுக்காக நிகழ்த்தப்பட்ட பிரம்ம யக்ஞம் அல்லது ஆதிபலி என்ற இரகசியத்தை, மனுஷகுமாரன் லாறி முத்துகிருஷ்ணா 1986-ம் ஆண்டு பக்தர்களுக்கு வெளிப்படுத்தினார். அந்த ஆதி வேள்வியானது உன்னத நிலையில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை பக்தர்களுக்கு விளக்கினார். அது பூலோகத்தில் மாத்திரம் அல்ல, பரலோகத்தின் கீழ் உள்ள சர்வ சிருஷ்டிக்கும் நிகழ்த்தப்பட்டது. ஆதி புருஷராக அதை நிகழ்த்தி காட்டினார். இந்த பலியானது தேவ புத்திரரால் செலுத்தப்பட்டது என்று கூறினார்.

வார்த்தையானவர் அல்லது கிறிஸ்து அவருடைய குமாரனாக அதைச் செய்தார். உலகத்தோற்ற முதல் தேவனுடைய பிள்ளைகளால் பலி செலுத்தப்பட்டது. சிருஷ்டிப்பின் துவக்கம் ஆதி பாவம் கலியன் உருவெடுத்தல், பாதாளத்தின் தோற்றம் என்பவைகளைப் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தினார். இந்த இரகசியத்தை அறிந்து கொண்டவர்தான் மரணமில்லாமல் பெருவாழ்வு அடைவர், என ஆணித்தரமாக கூறினார். இந்த ஆதி வேள்வியை நிகழ்த்தியவர்களுக்கு ஜீவாத்மா வரப்பிரசாதமாக கொடுக்கப்பட்டது என்ற நற்செய்தியானது பக்தர்களுக்கு சந்தோஷத்தை அருளிச் செய்தது.

பலி என்றால் ஒருவரை கொல்வது என்று அர்த்தமல்ல. அந்த வார்த்தையானது தியாகத்தையும் குறிக்கும். இந்த ஆதி வேள்வி என்ற சொல் கீதையில் அழியாத யோகம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த வேள்வியை நினைவுகூர்ந்து இஸ்லாமியர் பக்ரீத் பண்டிகையாகவும், கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். ஆனால் அதின் உள் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது.

கல்வாரியை நம்புகிறவர்கள் காலவரம்புள்ள ஜீவனை மட்டும் பெறுவார்கள். ஆனால் ஆதிபலியை நம்புகிறவர்கள் மனுஷகுமாரன் மூலம் நித்திய ஜீவனை பெறுவார்கள். ஆதிபலியானது முழுமையான சரீர மீட்பிற்குரியது. அழியாமை அல்லது மரணத்தை மேற்கொள்ளும் சக்தியை கொடுப்பவர் கிறிஸ்துவாகிய மனுஷகுமாரன். இவரை முழுவதுமாக சரணடைவதால் நாம் பரமாத்மாவின் பரிபூரணத்தைப் பெறுவோம். ‘என்னைத் தேடி உங்கள் பாவங்களில் சாவீர்கள்’ என்று இயேசு கூறினார். கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் இரகசியமாக வந்ததோ மனுஷகுமாரன். ஆனால் மக்கள் இவரின் வருகையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்டவர்கள் மரித்து போவார்கள் என்பதுதான் அதன் பொருள்.

கடவுளின் சேவையை சுகமளித்தல், இரட்சித்தல், மீட்பு, மரணமில்லாத பெருவாழ்வு-நித்திய ஜீவன் என்ற நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். இயேசு அநேக அற்புதங்களை செய்து காட்டினார். அநேக மக்களை அவர் தன்னைப் பின்பற்றும்படி செய்தார். இப்படி ஆரம்ப காலத்தில் அவரை பின்பற்றியவர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் மேற்பட்டதாக இருந்தது. அவர் ஆத்தும இரட்சிப்புக்கான நற்செய்தியை தனது மலை பிரசங்கத்தில் நிகழ்த்தினார். அந்த மலை பிரசங்கம் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தோன்றியது. இதனால் போதகர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். கடைசியாக அவர் கடவுளின் தேவநீதியை பற்றி பிரசங்கம் செய்தார்.

– தொடரும்…

தேவ ஞான சூரியன், இயக்குனர், வேலூர்

✡✡✡✡✡✡✡

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை