தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » கிழக்கே தோன்றிய மின்னல் – 4

கிழக்கே தோன்றிய மின்னல் – 4

1986-ம் ஆண்டு கிறிஸ்தவ மத திருச்சபைகளுக்கும், கிறிஸ்தவ மத பாதிரிமார்களுக்கும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா மேலும் சில கேள்விகளை முன் வைத்தார். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் கிறிஸ்தவ மத திருச்சபைகளும், பாதிரிமார்களும் எவ்விதமான பதிலையும் சொல்லவில்லை. கிறிஸ்தவ மதம் தவறான கொள்கையின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவிக்க ஆரம்பித்தார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா.

அவர் கூறியது:- உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டது இயேசுகிறிஸ்து அல்ல. அவருடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்பவன்தான். இயேசு நாதர் மரித்தபின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் நூறு சதவீதம் கற்பனையான கட்டுக்கதை. கட்டு கதைகளுக்கு செவிகொடுக்கக்கூடாது என்று அப்போஸ்தலராகிய பவுலும்கூட எச்சரித்துள்ளார்.

இயேசு நாதரை கொல்லுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் சிலுவையை கடவுளின் அடையாளமாகத் தொழுவது எந்தவிதத்தில் நியாயமானது? 2,000 வருடங்களுக்கு முன்பாக வந்த நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு அவர்தான் என்று பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா பிரகடனம் செய்தார். பிலாத்துக்கும் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கும் முன்பாக நடந்தவற்றிற்கும் தான்தான் சாட்சி “இன்று நான் இயேசுவாக உங்கள் முன்பாக நிற்கிறேன்” என்று பிரசங்கித்து, எல்லோர் முன்னிலையிலும் பிரகடனம் செய்தார்.

அதோடு 1988-ம் ஆண்டில் அவர் மாம்சத்தில் உயிரோடு இருந்தபோதிலும் இயேசுவைப்போல நான் இந்த உலகத்தில் இல்லை என்று அறிவித்தார். இது தேவதூஷணம் அல்ல. ஆனால் இதுதான் உண்மை. பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா சுமார் பத்து முறைகளுக்கு மேலாக உலகை சுற்றி வந்திருக்கிறார். அங்கு கடவுளைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், வேதங்களில் உள்ள தத்துவங்கள் குறித்தும் ஆன்மீக பிரச்சாரம் செய்தார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, மலேசியா, ஸ்ரீலங்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, துபாய், நெதர்லாந்து, பிரிட்டிஷ் கயனா, ஜமைக்கா, டிரினிடாட், ஹவாய், ஆஸ்டிரியா, ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளும் – நூற்றுக்கணக்கான நகரங்களும் இதில் அடங்கும்.

அவருடைய வெளிநாட்டு பயணங்கள் அத்தனையுமே முன்கூட்டி திட்டமிடாத பயணங்களாகவே இருக்கும். அவர் ஒரு முறைகூட தனது பயணங்களுக்குத் தேவையான பணத்துடன் சென்றதில்லை. காரணம், அவரிடம் எப்போதும் அவ்வளவு பணம் இருந்ததில்லை. அவர் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதை ஆண்டவரின் கட்டளையாக கருதிச் செய்வது வழக்கம். அவரது வெளிநாட்டு பயணங்களும் அப்படியே நிகழ்ந்தவைதான். ஆண்டவரும் அவரை கைக்கு கையாக, மெய்க்கு மெய்யாக வழிநடத்தினார் என்பதுதான் உண்மை.

<<<முன் பதிப்பு                       தொடர்ந்து படிக்க>>>

✡✡✡

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை