தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » கிழக்கே தோன்றிய மின்னல் – 2

கிழக்கே தோன்றிய மின்னல் – 2

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

டேல் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தீர்க்கதரிசி பிரன்ஹாமின் கடவுள் பணியில் பிரதானமான பங்கு வகித்தவர். அவர் அமெரிக்காவில் உள்ள ‘ஹார்ட் ஃபோர்ட்’ என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். 1967-ம் ஆண்டு, முதன் முதலில் பாலாசீர் லாறியை அவர் சந்தித்தார்.

அது முதற்கொண்டு, பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் கருத்துகளுக்கு தன்னைப் பறி கொடுத்தார். மனிதன் சந்திரனில் கால் வைத்த தினத்தன்று பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவிற்குள் கடவுள் இறங்கி வந்த செய்தியை உலகம் முழுவதும் எடுத்து கூறியவர் இவர்தான்.

இதனால் ஏற்பட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளையும் மீறி இந்த காரியத்தை அவர் செய்து முடித்தார். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாதான் மனுஷகுமாரன் என்று தெளிவாக உணர்ந்து கொண்ட டேல் ‘கிழக்கிலிருந்து தோன்றிய மின்னல்’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். இந்த தெய்வீகக் காரியங்கள் அனைத்திலும் அவருக்கு உதவியாக இருந்தவர் அவருடைய மகள் சுசி பேக்கர். இவர்கள் இருவரும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவுடன் இந்தியாவில் 5 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.

லாறி முத்துக்கிருஷ்ணா அமெரிக்காவிலிருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக அவருடன் தங்கியிருந்தவர் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ரோஜர் ஜெரார்டு என்பவர். அமெரிக்காவில் லாறி முத்துக்கிருஷ்ணா சென்ற இடமெல்லாம் இடியும், மின்னலும், மேகங்களும், சுழல் காற்றும் புடைசூழ்ந்து வந்ததை கண்டு அதிசயப்பட்டார் இவர்.

மனுஷகுமாரனின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் இவை என்பதை தெரிந்திருந்த ரோஜர் ஜெரார்டும், அவரது மனைவியும், தாயாரும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாதான் மனுஷகுமாரன் என்பதை புரிந்துகொண்டனர். அமெரிக்காவிலிருந்து பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா இந்தியா திரும்பியபோது சகோதரர் ரோஜர் ஜெரார்டும் அவர் மனைவியும் மனுஜோதி ஆசிரமத்திற்கு அவரோடு வருகை தந்தனர்.

இந்தியாவில் உள்ளவர்களுக்கும் ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும், சந்திரனில் மனிதன் கால்வைத்த அன்றைய தினத்தில் பாலாசீர் லாறி மனுஷகுமாரனாக வெளிப்படுத்திய செய்தியையும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிகழ்ந்த அற்புதங்களையும் சகோதரர் ரோஜர் ஜெரார்டுதான் விளக்கிக் கூறினார். மனுஷகுமாரனை சந்தித்தோம் என்ற மகிழ்ச்சியுடன் சகோதரர் ரோஜர் ஜெரார்டு தனது நாட்டிற்குத் திரும்பினார். ஆனால் அவர் அங்கு சென்றதும் மனுஷகுமாரன் பற்றிய தகவல்களை எவ்வகையிலும் வெளிப்படுத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகளால் மிரட்டப்பட்டார்.

ஒரு நாள் கலிபோர்னியாவில், லாறி தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ‘உங்களுக்கு என்ன வேண்டும்? கடவுளிடம் கேளுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர் காத்திருக்கிறார்” என்று தனக்கே உரிய கம்பீரமான சிம்மக் குரலில் முழங்கி கொண்டிருந்தார் லாறி முத்துக்கிருஷ்ணா.

முன் பதிப்பு                                                                                                                                                                                                                                 தொடரும்…

✡✡✡✡✡✡✡

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை