தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » கிழக்கே தோன்றிய மின்னல் -10

கிழக்கே தோன்றிய மின்னல் -10

இதில் மனுஷகுமாரனின் மாமிசத்தை புசிக்காமலும், அவருடைய இரத்தத்தை அருந்தாமலும் போனால் நீங்கள் நித்திய ஜீவனை பெற முடியாது என்றார். இப்படி சொன்னதும் இயேசுவை பின்பற்றியவர்களில் அநேக சீடர்கள் அவரை விட்டு அகன்றனர். அவருடன் இருந்த எழுபது சீடர்களில் ஐம்பத்தெட்டு பேர் அவரை விட்டு பிரிந்து சென்றனர். நிலையில்லாத வாழ்க்கைக்கு பணி செய்வதை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்குரிய பணிகளை செய்யுங்கள். அதற்கு மனுஷகுமாரன் உங்களுக்கு உதவியாக இருப்பார். இதுதான் சரீர மீட்பின் நற்செய்தி. சிலுவை அறைதலின் சம்பவத்தின்போது, அவருக்காக நின்ற பதினொரு சீடர்களும் ஓடி விட்டனர். பன்னிரெண்டாவது சீடனான யூதாஸ் மாத்திரமே கடைசி வரை அவருடன் இருந்தான். இதைப்போலவே மனுஷகுமாரனின் காலகட்டத்திலும் நடைபெற்றது. சுகமளிக்கும் ஊழிய நிலையில் பல இலட்சக்கணக்கானோர் அவரை தீவிரமாக பின்பற்றினார்கள். ஆனால் அவர் வேத இரகசியங்களை கூறியதும் இது கடினமான உபதேசம் என்று சொல்லிவிட்டு அநேகர் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் அறிவு ஆற்றலையும் – பிரசங்கத் திறமையையும் கண்ட பல அமைப்புகள் அவரை தங்கள் அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்தன. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தன. பணத்திற்கும் புகழுக்கும் விலைபோகாத அவர் கடவுள் பணி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருந்தார். அவர் இப்பணிக்காகவே இப்பூமியில் அவதரித்தார். இதற்கென அவரும் அவர் குடும்பத்தாரும் தந்த விலை அதிகம். சராசரி மனிதர்களைப்போல பணம், பதவி, புகழுக்காக காரியங்களைச் செய்யும் சர்வதேச மதபோதகர்களின் வரிசையில் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா, மயங்காத மகாபுருஷராக விளங்கினார்.

அவருடைய நாற்பது ஆண்டு கால சேவையில் அவர் ஒருபோதும் காணிக்கைகளையோ, நன்கொடைகளையோ பெற்றதில்லை. இதனால் சாதாரண மக்கள் அவர்மீது அன்பு பாராட்டினர். மத அமைப்புகள் அவர்மீது துவேஷம் கொண்டு அவரை தாக்குவதற்கு பலமுறை முயற்சி செய்தனர். கொலை முயற்சிகள் கூட மேற்கொள்ளப்பட்டன. அவர் தொட்டதினால் – அவர் கைபட்டதினால் தங்கள் நோய்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள் ஆயிரம்! ஆயிரம்! அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.

இது ஒரு விசித்திரமான சம்பவம். லண்டனை சேர்ந்த ஒரு பெண்மணி, “நான் எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடக்கிறேன். நான் குறிக்கும் நேரத்தில் நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள். கடவுள் எனக்கு சுகமளிப்பார்” என்று லாறி முத்துக்கிருஷ்ணா அவர்களுக்கு கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்தார். பாலாசீர் லாறி முத்துகிருஷ்ணா அவர்களின் அபூர்வ சக்தியினால் இறந்து போனவர்கள்கூட மீண்டும் உயிர்பெற்று எழுந்து நடந்ததுண்டு. இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது ஆந்திர மாநிலம். அங்கு விஜயவாடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி பிறவி ஊமையாக இருந்தாள். லாறி அவர்களின் கைபட்ட அந்த கணத்திலேயே அந்தப் பெண் வாய் திறந்து பேசினாள்.

– தொடரும்…

தேவ ஞான சூரியன், இயக்குனர், வேலூர்

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை