தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » காற்றும் கடவுளும்!

காற்றும் கடவுளும்!

ஒரு நாத்திகன், ஞானி ஒருவரிடம் கடவுளைக் குறித்து சில கேள்விகளை கேட்டான். கடவுளை கண்முன்னே காண்பிக்க உம்மால் முடியுமா? என்று குதர்க்கமாக அந்த ஞானியிடம் கேட்டான்.

அப்பொழுது அவர்கள் அருகில் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஞானி அந்த சைக்கிளை ஓட்டியவரைப் பார்த்து சைக்கிளை நிறுத்தச் சொன்னார். அவனும் சைக்கிளை நிறுத்தினான். ஞானி இப்பொழுது அந்த நாத்திகனைப் பார்த்து இந்த சைக்கிள் எப்படி ஓடுகிறது என்று கேட்டார்.

நாத்திகனோ, இதுகூட தெரியாத நீரெல்லாம் ஒரு ஞானி என்று கிண்டல் அடித்துவிட்டு, இது சைக்கிளின் டயரிலுள்ள காற்றினால் ஓடுகிறது என்று கூறினான். ஞானியோ புன்முறுவலுடன் அப்பா சைக்கிள் டயர்தான் என் கண்ணுக்குத் தெரிகிறது. அதிலுள்ள காற்று என் கண்ணுக்குத் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத காற்றால் எப்படி சைக்கிளை ஓட்ட வைக்க முடியும்? அந்த காற்றை எனக்கு கொஞ்சம் காண்பி என்றார்.

நீ காற்றை என் கண்ணுக்கு காண்பித்து விட்டால், நான் உனக்கு கடவுளை கண்முன்னே காண்பிக்கிறேன் என்றார். நாத்திகன் உடனே காற்றைப் பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்றான். தம்பி கடவுளும் அப்படித்தான், அவரை உணரத்தான் முடியும் என்று அந்த ஞானி கூறினார்.

Filed under: ஆன்மீக கருத்து