தமிழ் | తెలుగు

» கவிதைகள் » கான மழை பொழிவோம்!

கான மழை பொழிவோம்!

காரிருள் போக்கிடும் ஸ்ரீ லஹரி

கருணையைப் பொழிந்திடும் ஸ்ரீ லஹரி

கற்பனைக் கெட்டா ஸ்ரீ லஹரி

துவாரகை கிருஷ்ணனே ஸ்ரீ லஹரி

அற்புதமானவர் ஸ்ரீ லஹரி

ஜோதியாய் இருப்பவர் ஸ்ரீ லஹரி

ஆனந்தம் அளிப்பார் ஸ்ரீ லஹரி

ஆற்றலை வளர்ப்பார் ஸ்ரீ லஹரி!

மனுஜோதி கண்டவர் ஸ்ரீ லஹரி

மங்களம் தருபவர் ஸ்ரீ லஹரி

எல்லாம் அறிந்தவர் ஸ்ரீ லஹரி

நர நாராயணராய் நின்றவர் ஸ்ரீ லஹரி!

கவிதையில் வாழ்பவர் ஸ்ரீ லஹரி

வியாதியைக் களைந்தவர் ஸ்ரீ லஹரி

உலகம் புகழும் ஸ்ரீ லஹரி

உத்தம புருமூராம் ஸ்ரீ லஹரி!

ஆன்மீக மாநாட்டில் ஸ்ரீ லஹரி

ஐயங்கள் அகற்றிடும் ஸ்ரீ லஹரி

காக்கின்ற கடவுளாம் ஸ்ரீ லஹரி

தர்மத்தைப் போற்றிடும் ஸ்ரீ லஹரி

சோதனை களைந்திடும் ஸ்ரீ லஹரி

அன்பினை அறிந்தேன் ஸ்ரீ லஹரி

கவிபாடிட செய்தாய் ஸ்ரீ லஹரி

கானமழை பொழிவோம் ஸ்ரீ லஹரி!

-கவிஞர் எஸ். இரகுநாதன், சென்னை

Filed under: கவிதைகள்