தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » கவிதைகள்

கவிதைகள்

பாரதப் போரில் தேரோட்டி

பகைவரும் உன்னை பாராட்டி – இடையே

நீரதன் தலைமைப் பொறுப்பேற்று

நடத்திய திறமைக்கு நிகரேது?

இரு தாரங்கள் கொண்டவனே

அவதாரங்கள் பத்து எடுத்தவனே – மணி

வண்ணா உன் திருநாமம்

சொன்னால் பகையும் நெருங்காது.

வீ. உதயகுமாரன், திருவாரூர்

✡✡✡

ஒன்றே இறைவன் ஆகும் – அதை

ஒதுக்கின் நிம்மதி போகும்

துன்பங்கள் எங்கும் படரும் – மனித

வாழ்வினில் என்றும் தொடரும்

மனிதனை மனிதன் கொல்லும் – கொடும்

மடமையே எதுவிங்கு வெல்லும்

வாழ்வதும் தடம்மாறிச் செல்லும் – நெடும்

வறுமையும் பற்றியே கொள்ளும்

மானுடம் ஒன்றே குலமாம் – அதை

மனதினில் கொண்டால் நலமாம்

மதத்துடன் மதத்தினைச் சேரு – அதில்

மாண்புகள் கிடைத்திடும் பாரு

பொதிகை மு. செல்வராசன், சென்னை

✡✡✡

 

ஸ்ரீ லஹரி அய்யா துணை!

அன்பு இருந்தால் ஆதரிக்கும்

சுத்தம் குறை இருந்தாலும்

ஸ்ரீ லஹரி அய்யாவை வணங்கு!

இறைவன் சொல்லுவது உண்மை

நோய் இருந்தால் நோன்பு

வினை இருந்தால் விரதம்தான்

வாழ்வை வந்து வலி நீக்கும்

வாசம் மலர் பூ மணக்கும்

கோடி மக்களை கொண்டு

அணைக்கும் உலகம் பூரா உறவாகும்

பாப்பாக்குடி பக்கத்தில்

வந்தவருக்கு வரம் கொடுக்கும்

அய்யா என்று சொல்லி தரும்

எல்லாரும் கும்பிடும்

ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும்

பாவங்களை போக்கும் எங்களுக்கு

ஸ்ரீ லஹரி அய்யாவே துணை!

M.S. முனியம்மாள், வள்ளியூர்

✡✡✡

 

வந்தார் அய்யா வந்தாரு லஹரிகிருஷ்ணா வந்தாரு

தந்தார் அய்யா தந்தாரு ஒருமைப்பாட்டை தந்தாரு

சென்றார் அய்யா சென்றாரு மேலை நாடுகளெல்லாம் சென்றாரு

வென்றார் அய்யா வென்றாரு வேதங்கள் ஆய்வில் வென்றாரு

நின்றார் அய்யா நின்றாரு – ஒரு தெய்வமாய் உலகில் நின்றாரு

என்றார் அய்யா என்றாரு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றாரு

திகழ்ந்தார் அய்யா திகழ்ந்தாரு மனுஜோதி ஒளியாய் திகழ்ந்தாரு

ஏகினார் அய்யா ஏகினாரு வைகுண்டம் தானே ஏகினாரு

பாவலர் தூத்துக்குடி பாலு

✡✡✡

 

கவியினுள் ஜீவன் வைப்போம்

கலியினை விரட்டி அடிப்போம்

ஒன்றுபட்ட வாழ்வுக்கு வழி வகுப்போம்

ஒற்றுமை உலகை வடிவமைப்போம்!

ஒன்றே குலமென ஓதாமல்

ஒரு குடியாய் வாழ்ந்திருப்போம்

ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் – சுவை

கூட்டிய வாழ்வாக வாழ்ந்திருப்போம்!

ஒருவனே தேவனென பாடாமல்

ஒற்றுமை வேதத்தில் காண்போம்

மொழி வேறாக இருப்பினும்

கருத்தொற்றுமை நம்மில் காண்போம்!

அனுதினம் லஹரி கிருஷ்ணாவைப் பாடுவோம்

அணுவையும் மலராக மாற்றுவோம்

அண்டம் கண்டம் யாவையும்

அணைத்து சேர்த்து வாழுவோம்!

K. இரவிக்குமார், கோவை

✡✡✡

 

ஆதி முதலானது தமிழ்

ஆதாம் ஏவாள் பேசியதும் தமிழ்

அமுதம் கலந்தது தமிழ்

ஆண்டவன் பேசியதும் தமிழ்

கருணை நிறைந்தது தமிழ்

ஆடும் மாடும் பாடியது தமிழ்

அனைத்துயிரையும் அணைக்கும் தமிழ்

ஆண்டவனார் சொன்ன தமிழ்

அருளும் பொருளும் நிறைந்த தமிழ்

அகல் விளக்கேற்றியதும் தமிழ்

அரியணை தோறும் அமர்ந்திருக்கும் தமிழ் – நல்

ஆட்சியினை (தர்மயுகம்) தோற்றுவிக்கும் தமிழ்

வள்ளலார் பாடிய தமிழ்

வருங்கால ஆட்சிமொழி தமிழ்

சாதி சாத்திரங்கள் அழித்தே

சமநெறி கொடுக்கும் தமிழ்

– பாலசந்தர், உதவி ஆசிரியர்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து