தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து, கவிதைகள் » கவிதைகள்

கவிதைகள்

அனுக்ரகித்தாய்

மனுஜோதி ஆஸ்ரமத்தை நீ படைத்தாய்

மனுகுலம் ஒன்றினையும் நீ படைத்தாய்

அறியாமை சாகரத்தில் வீழ்ந்தவர்கள்

ஆறுதல் நீ கொடுத்து ஆதரித்தாய்

ஆநிரை கன்றுகளை மேய்த்தவன் நீ

ஆயிரம் வேதமொழி கற்றவன் நீ

கற்பக மலர்களிலே நீயிருப்பாய்

குலம்வாழ அற்புதங்கள் நீ புரிவாய்

வன்மம் மனதைவிட்டு போக்கிடுவாய்

வறுமை இல்லையென்று ஆக்கிடுவாய்

முந்தையர் செய்த நல்ல தவத்தினாலே

முரளி கிருஷ்ணா நீ அனுக்ரகித்தாய்

– கே. வி. ஜெனார்த்தனன், காஞ்சிபுரம்

—-

வழிகாட்டுமே

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

என்ற நற் கொள்கை தனையே

இன்றே நாமெல்லாரும்

ஏற்றுக்கொள்வோம் கூடி வாரீர்……..!

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின்

அரும்பெரும் போதனைகள் பின்பற்றியே

எல்லோரும் ஓர் குலம்

என்ற கொள்கை தன்னை யேற்றே

இம்மண்ணில் மாந்தரெல்லாம்

இணைந்தொன்றாய் வாழ்ந்துயர்வோம்

வாரீர்…..! வாரீர்……!

– நல்லாசிரியர் கவிஞர் பி. வேலுசாமி, எடப்பாடி

——

விண்ணும் . . . மண்ணும் . . .

விண்ணை மறந்தவர் கோடி! மண்ணை இழந்தவர் கோடி!

விண்ணையும் மண்ணையும் அளந்தவன் ஒருவனே!

விண்ணின்று மண்ணுக்கு வந்தவன் அவனே!

வந்தவர் தன்னைக் கண்டவர் யாரோ?

கண்டவர் செல்வார் கைலாசந்தானே!

கைலாசம் என்பது இமயமில்லையே!

கயிலை நாதன் இருக்குமிடந்தானே!

கடைகோடி தன்னில் இருப்பவன் அவனே!

விரைந்திடுவோம் அங்கு!

வீழ்ந்திடுவோம் அவர் திருப்பாதம்.

வினை தீர்க்கும் மன்னன் அவன் – நம்மை

விண்ணுக்கு கொண்டு செல்வான்!

விந்தையவன் கல்கி தானே!

விண்ணையும் மண்ணையும் ஒன்றாக்கி

விண்ணவர் கொடி தானேற்றி, வீரத்திலகம் தனதாக்கி

வீரமாய் வீற்றிருக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

– இறைத்தொண்டர் K. ரவிக்குமார், கோவை

—–

அன்பின் மறு அவதாரம் ஸ்ரீ லஹரி அய்யா

பிரார்த்தனையில் உன் அன்பு தரிசனம் கண்டேன்

வந்தவர்கள் அனைவரின் பசி தீர்த்த ஸ்ரீ லஹரி

இன்முக வரவேற்பு, மானுடனும் மனித குலமாம்

இதை மனதில் தந்த லஹரி அய்யா

கண்டேன் உன் வரவை அனுதினமும்

லஹரி கிருஷ்ணாவைப் பாடுவோம்

கூடுவோம் சேர்ந்து வாழுவோம் நம் ஆசிரமத்தில்……

– சு. பொருநை பாலு, திருநெல்வேலி

—-

நெஞ்சில் வாழும் லஹரி அய்யா

நீர் ஒருவரே நிரந்தரம் அய்யா!

உண்மை என்பதன் பொருள் யாவும்

உனது அவதார பெருமை அய்யா!

தர்மம் என்பதன் அறம்தான்

உமது வாழ்வின் ஒளியே அய்யா!

எமை காக்க எடுத்த அவதாரம்

எனதப்பன் லஹரி எனும் அதிசயமே!

உனை துதிப்பேன் தினம் துதிப்பேன்

எனைக் காப்பீர் என்பதனாலே!

– கா. இரா. குப்புதாசு, தேசீய நல்லாசிரியர், செஞ்சிக்கோட்டை

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து, கவிதைகள்