தமிழ் | తెలుగు

» கவிதைகள் » கவிதைகள்

கவிதைகள்

சத்திய நாராயணா! கிருஷ்ணா! கோகுலநாதா!
நித்தம் நினைக்கின்றேன், நீரே என் சொந்தம்!
சித்தம் தெளிய வைக்கும் ஸ்ரீமந் நாராயணா!
புத்தியை அருளுகின்ற புண்ணியனே என் பந்தம்!

கண்ணனே! மாயத் திரையகற்றும் விண்ணக கலைஞனே!
விண்ணை ஆளும் முழு முதற் தேவனே!
என்னை வழிநடத்தும் என் மனக் காவலனே!
கண்ணின் மணியாகி என் கருத்தில் நிற்க வாரீர்!

பிருந்தாவனத்தின் பிரம்ம சொரூபமே!
அருந்தவம் ஆற்றுவோர்க்கு அற்புத ரூபமே!
யாருமில்லை உமக்கு இணையென்று
திருமறை கூறும் பற்பல சான்று!

மனுஜோதியிலுறையும் திவ்விய ஸ்ரீனிவாசனே!
தூய மாந்தரின் உயரிய தலைவனே, உத்தம புத்திரனே!
வருவீரோ குடியிருக்க அடியேன் மனக்குகையில்
தருவீரோ உமதருள் உன் மக்கள் எமக்கு!

திருமதி. மணி அர்ஜுனன்,
உதகை

*******

Filed under: கவிதைகள்