தமிழ் | తెలుగు

» கவிதைகள் » கற்றார் போற்றிடும் லஹரி மகான்!

கற்றார் போற்றிடும் லஹரி மகான்!

கருணையைப் பொழிந்திடும் தூயன் மகான்
கற்றார் போற்றிடும் ஸ்ரீ லஹரி மகான்
கடமையை செய்திட உதவும் மகான்
காருண்ய மூர்த்தி ஸ்ரீ லஹரி மகான்!

வருத்தம் போக்கிடும் நல்ல மகான்
ஸ்ரீ லஹரி என்றிடும் ஜீவன் மகான்
குவலயம் காத்திடும் உயர்ந்த மகான்
குறிப்பறிந் தருளும் ஸ்ரீ லஹரி மகான்!

ஒன்றே குலமென்று சொன்ன மகான்
ஒருவனே தேவனென்று பதித்த மகான்
ஒற்றுமை நமக்கு வழிகாட்டிய மகான்
உலகநட் புறவிற்கு ஸ்ரீ லஹரி மகான்!

உலகில் பகையாற்றி வாழும் மகான்
உன்னத வாழ்வுதரும் நித்திய மகான்
சத்திய நகரம் வாழும் மகான்
மனுஜோதி ஆசிரம பூரண மகான்!

நமக்கு எல்லாம் ஒளிதரும் மகான்
நன்மைகள் வழங்கி போற்றும் மகான்
பெரியார், சிறியார் காக்கும் மகான்
பாசம் அருளும் ஸ்ரீ லஹரி மகான்!

– கவிஞர். எஸ். இரகுநாதன், சென்னை

*******

Filed under: கவிதைகள்