தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கருத்து

கருத்து

அன்புடையீர், வணக்கம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் மழை பொழியும் மனுஜோதி மேஜூன்ஜூலை 2016 இதழ் படித்தேன். மனுஜோதி ஆசிரம நிகழ்வு மற்றும் ஆன்மீக சுற்றுலா படங்கள் மிகவும் அருமையாக இருந்தன. அறன் வலியுறுத்தலை வலியுறுத்தும் “தலையங்கம்”மிக அற்புதம். வர்த்தமான மகாவீரரின் ஜைன மதத்தை சார்ந்தவன் நான் என்பதனால் அவரைப்பற்றி “பொறுமையின் உருவம்”என்ற கட்டுரையில் பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா சுட்டியபாங்கு நெஞ்சில் நின்றது. “ஆன்மீக புலன்கள்” அற்புதமான கட்டுரை. ஸ்ரீமத் பகவத்கீதையின் பரமாத்மாவே நம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்பது வெள்ளிடைமலை. மனுஷகுமாரன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாதான் என்பதனை நான் முழுமையாக நம்புகிறேன். 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் விஸ்வரூபத்தை என் மனக் கண்முன் கொண்டு வந்து ஆராதித்து மெய் சிலிர்க்கிறேன். “சாந்தியளிக்கும் ஆன்மீகம்” மனதில் தெளிவை தருகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பரம்பொருள் வாழும் இப்பூமியில் ஆத்மாவை தேடும் காலத்தில் “அகில இந்திய சுற்றுப்பயணம்” ஓர் வரப்பிரசாதம். “தக்ஷிணாமூர்த்தி” என்ற கட்டுரையில் சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருள்ளது என்ற உண்மையை உணர்ந்தேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே பகவான் ஸ்ரீ லஹரியின் உன்னத உபதேசமாகும். இவை அனைத்தையும் அற்புதமாக நம் மனக்கண் முன் கொண்டு வந்த ‘மனுஜோதி’ ஆன்மாவின் இதயகீதம் என்பதே உண்மை.

கா. இரா. குப்புதாசு, செஞ்சிக்கோட்டை

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து