தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதம்

கடிதம்

பேரன்புடையீர்,

மனுஜோதி மேஜுன்ஜூலை 2016 இதழ் கிடைத்தது. ஆன்மீக வழியை அறிந்து, உணர்ந்து வளமுடன், நலமுடன், மகிழ்வுடன் வாழ ஆர்வத்துடன் முயற்சிக்கும் அனைத்து மதத்தினரும் அன்புடன், சமபாவத்துடன் விருப்பு வெறுப்பின்றி ஒரு வரி விடாமல் தொடர்ந்து படிக்கும் மற்றும் படிக்க வேண்டிய ஆன்மீக இதழ் மனுஜோதியாகும். பயனுள்ள பல புதிய தகவல்கள், பரந்த மனம் விழிப்பு தரும் கட்டுரைகள், குறிப்புகள் கொண்டதாகும். உங்களது உயர்ந்த சேவைக்கு நன்றி. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருவடிக்கு நமஸ்காரங்கள். தொடரட்டும் தொண்டு மேலும் சிறப்பாக!

கு. துரைசாமி ஐயர், திருவள்ளூர்



வணக்கம். தங்கள் சேவைக்கு இறைவன் துணை இருப்பான், தைரியத்துடன் மேலும் தாங்கள் சேவை செய்ய தங்களுக்கு பூரண ஆரோக்கியம் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!

Dr. S.N. முரளீதர், ஈரோடு



மனுஜோதி” பத்திரிக்கையில் ஆன்மீக செய்திகளோடுகூட “பனைமரத்தின் சிறப்பு”மற்றும் நமது தாமிரபரணி நதியின் சிறப்பை பற்றி “வற்றாத ஜீவநதி”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “நிகழாண்டில் 5 சூரிய சந்திர கிரகணங்கள்” பற்றிய அரிய ஆக்கப்பூர்வமான தகவல்களையும் மனுஜோதி மேஜுன்ஜூலை-2016 இதழில் வெளியிட்டு, பலரும் அறியும் வண்ணம் பெருமை சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள், நன்றி!

இரா. நல்லகண்ணு, பாளையங்கோட்டை



இந்த மாத மனுஜோதி இதழ் படித்தேன். “ஆன்மீக புலன்கள்” கட்டுரையைப் படித்து ஐந்து புலன்களின் பயன்பாட்டைப்பற்றி தெளிவாக புரிந்துகொண்டேன் மற்றும் “பனை மரத்தின் சிறப்பு” பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். “அகில இந்திய சுற்றுப்பயணம்” படித்து அந்த நிகழ்வுகளை தெரிந்துகொண்டேன். உலகத்தில் எங்கும் இல்லாத இறை பக்தி இந்தியாவில் அதிகமாக இருப்பதையும் தெரிந்துகொண்டேன்.

S. ராமகிருஷ்ணன், இரணியல்



அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் சாறு பிழிந்து இறையாண்மையை நெறிப்படுத்தும் ‘மனுஜோதி’யின் சேவை அளப்பரியது. “ஆன்மீக புலன்கள்” சம்பந்தப்பட்ட கட்டுரை, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற இயேசுவின் அருளுரையை நினைவுபடுத்துவதாய் அமைகிறது. “சாந்தியளிக்கும் ஆன்மீகம்” இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும் உயிரோட்டமான தொடராகும். தொடர்க நின் சேவை!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்



என் அன்பான மனுஜோதி இதழ் ஆசிரியருக்கு வணக்கம். இம்மாத இதழ் கிடைத்தது, பாராட்டுக்கள். தவறாமல் என் விலாசத்திற்கு புத்தகம் அனுப்பும் தங்களுக்கு நன்றிகள். இம்மாத “அட்டையின் விளக்கம்” மிக பயனுள்ளதாக இருந்தது. சிறப்பு பாராட்டுக்கள். “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்” படித்தேன். பயனுள்ளதாக தந்த ஆசிரியருக்கு சிறப்பு பாராட்டுக்கள். நான் இம்மாதம் நம் கல்கி அவதார சிறப்பு விழாவில் கலந்துகொண்டேன். மிக சிறப்புமிக்க சர்வ மத பிரார்த்தனை கூட்டம், நல்ல தரமான மதிய உணவு அடேங்கப்பா ஊழியர்கள் மிக சிறப்பாக பணியாற்றிய விதம் அருமை. மெய் சிலிர்க்க வைத்த பிரார்த்தனை, மிக சிறப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது. பல நண்பர்களையும் சந்திக்கின்ற இவ்விழா மிக சிறப்பாக நடந்தது. தனி பாராட்டுக்கள். நன்றி!

சு. பொருநை பாலு, திருநெல்வேலி

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து