தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர்,

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் படித்தேன். அதில் கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?, சங்கைமிக்க குர்-ஆன், ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் மற்றும் கதைகள், செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. இதுபோன்ற செய்திகள் வாழ்க்கை வாழ ஓர் உதாரணமாக விளங்குகிறது.

வேறு இயக்கமாக இருந்தால் ஓர் புத்தகம் அனுப்ப வங்கியில் இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கட்டளையிடுவார்கள். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு புத்தகத்தையும் தங்கள் செலவில் அனுப்புகிறீர்கள். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகத்தை எனக்கு அனுப்பியதற்கு தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்கி என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.

தி. மேகநாதன், பண்ருட்டி, கடலூர்

✡✡✡

மனுஜோதி ஆசிரியருக்கு வணக்கம். நாங்கள் ஒருநாள் மதியம் எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபொழுது பொதிகை டி.வியில் “வரலாற்று சுவடுகள்” என்ற நிகழ்ச்சியில் நீங்கள் வெளியிட்ட லஹரி கிருஷ்ணாவின் வழிமுறைகள் மற்றும் ஆசிரமத்தைப் பற்றி பேசுவதை எங்களால் பார்க்க முடிந்தது. அதினுடைய செய்திகளை நீங்கள் சொல்லும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து  எங்களுக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. இப்பொழுதுள்ள காலகட்டத்தில் இப்படி ஒரு ஆசிரமம் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் இந்த மனுஜோதி ஆசிரமத்தை காண வருவதாக இருக்கிறோம்.

R. செந்தமிழ் செல்வி, தஞ்சாவூர்

✡✡✡

அன்புள்ள மனுஜோதி ஆசிரியருக்கு வணக்கம். மனுஜோதி 2015 நவம்பர், டிசம்பர், ஜனவரி 2016 இதழில் “மனித முயற்சியால் மட்டுமல்ல இறை வார்த்தையாலும் வாழலாம்” என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனுபவம் பற்றி எழுதி இருந்ததைப் பார்த்து மிகுந்த சந்தோஷமடைந்தேன். இதுபோல் மேலும் பல சத்தியத்தின் உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.

-S. பிச்சைப்பிள்ளை, கன்னியாகுமரி

✡✡✡

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம். ஆன்மீகத்தில் எப்படி நாம் முன்னேறுவது என்பதைப்பற்றி மனுஜோதி இதழ் மிகவும் எங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக உள்ளது. ‘தெய்வத்தின் துணை வேண்டும்’ என்ற தலைப்பில் வந்த அந்த சிறுகதை என் மனதை மிகவும் தெளிவாக்கியது. மேலும் என் பிள்ளைகளுக்கும் அந்த கதையை எடுத்துக் கூறினேன். மனுஜோதி இதழில் வந்த செய்தி எல்லாமும் என் வாழ்க்கைக்கு தகுந்ததாய் இருந்தது. அர்ச்சுனன் கிருஷ்ணருக்கு எப்படி கீழ்ப்படிந்தானோ அந்தப்படியே நாமும் லஹரி கிருஷ்ணாவுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஒவ்வொரு ஆய்வு இதழும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி!

G. சுகாசினி, விழுப்புரம்

✡✡✡

அன்பான மனுஜோதி ஆசிரியருக்கு வணக்கம். இம்மாத ஜனவரி இதழ் கிடைத்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கொடியேற்று விழா 2015, அக்டோபர் மாதம் 3-ம் தேதியன்று நடைபெற்றதை நேரில் பார்த்ததைப்போல மிக சிறப்பாக அட்டைப் படத்தில் ஆசிரியர் தந்த விதம் மிகமிக அருமை. பக்தி உணர்வுடன் பார்த்து பரவசமடைந்தேன். 33-ம் பக்கத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சியையும், சிருஷ்டிப்பு எது என்பதையும் படித்து உணர்ந்தேன். மிகவும் பயனுள்ள பகுதியாக தந்ததற்காக மனப்பூர்வமான பாராட்டுக்கள். இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதை ரத்தின சுருக்கமாக பயன் தரும் விதத்தில் தந்தது அருமை. தனி பாராட்டுக்கள். ஐயா பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதம் படித்தவுடன் மெய் சிலிர்க்க வைத்தது. சித்தர் வாக்கு அருமை. பாராட்டுக்கள். கடவுளின் சேவை குறித்து மிகவும் அற்புதமான தகவல்கள் சிந்திக்க வைத்தது. மிக்க நன்றி!

சு. பொருநை பாலு, நெல்லை

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து