தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர்,

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாத என் இதயதுடிப்பான மனுஜோதி இதழை படித்தேன். இதில் 46-வது கல்கி ஜெயந்தி விழாவின் படங்களை கண்டு, என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். “மகா கணபதி எனும் விடுகதை”, “மறுபிறவி ஸ்ரீமந் நாராயணருக்கு மட்டுமே! திரு. தேவாசீர் லாறியின் சொற்பொழிவு கட்டுரை”, “பிரார்த்தனையின் சக்தி”, “கவலைப்படுவதால் என்ன லாபம்?”, “திருந்திய முரடன்”, போன்ற கட்டுரைகள் எல்லாம் பயனுள்ள, படிக்க வேண்டிய, மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய கட்டுரைகள். மதம் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே! நன்றி!

– சு. முத்துச்சாமி, விட்டிலாபுரம்

✡✡✡

மனுஜோதி ஆசிரியர்க்கு, நம்முடைய மும்மாத இதழ் மிகவும் அருமையான கருத்துக்களை வெளியிடுகிறது. முக்கியமாக சமபந்தி போஜனம், சர்வ சமய மாநாடு, கலப்பு திருமணங்கள் போன்றவை மிகவும் இந்த நாட்டிற்கு அவசியமான உத்திகளை, இந்த உலகமறிய நடத்திக் காட்டுவது போன்ற நல்லதொரு சேவைகளை செய்துவருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மட்டுமல்ல, எங்களின் “அறிவுக்கு உணவு மையம்” மற்றும் எங்களின் “மனித நல இயக்கமும்” உங்களை வெகுவாக பாராட்டுகிறது. நன்றி! மேலும் ஆகஸ்டு – அக்டோபர் மாத இதழில் பக்கம் 17-ல் “கவலைப்படுவதால் என்ன லாபம்?”, பக்கம் 21-ல் “திருந்திய முரடன்”, மற்றும் பக்கம் 29-ல் “கலைஞனாக இருப்பதைவிட நல்ல மனிதனாக இரு” என்ற கட்டுரையும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பக்கம் 24-ல் இடம்பெற்ற “மாறிவரும் உலக வரைபடம்” கட்டுரை என் நெஞ்சத்தை மிகவும் உலுக்கிவிட்டது. என் மனங்கவர்ந்த மனுஜோதி இதழுக்கு மனமார்ந்த நன்றி!

 – Dr. அஞ்சல் அட்டை அணிலாடியார், திண்டிவனம்

✡✡✡

என் இனிய மனுஜோதி இதழ் ஆசிரியர்க்கு வணக்கம். மாத இதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. கடந்த ஜூலை மாதம் நம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 46-வது கல்கி ஜெயந்தி விழா சிறப்புகள் மற்றும் மிக சிறந்த முறையில் நிகழ்ச்சிகளையும் வண்ண படத்திலும் சிறப்பாக வடிவமைத்து தந்தது மிகவும் அருமை. அடேங்கப்பா! கவிஞர் தந்த “தீர்க்கதரிசியின் புத்திமதி” பயன் தந்தது. பாராட்டுக்கள். “திரு. தேவாசீர் லாறியின் சொற்பொழிவிலிருந்து தந்த ஆன்மீக தகவல்” மிகவும் பயனாக இருந்தது. தனி பாராட்டுக்கள். மும்மதமும் முக்கனியாக சாறு பிழிந்து மிக சிறப்பாக தந்த நம் இதழ் ஆசிரியர்க்கு சிறப்பு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். 46 – வது கல்கி ஜெயந்தி விழாவில் நடந்த முக்கிய பிரமுகர்களின் சொற்பொழிவை நேரிலே கேட்ட உணர்வை தந்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது. 32 பக்கங்களுமே பாதுகாக்க வேண்டிய ஆன்மீக பொக்கிஷமாகும். நன்றி!

 S. பொருநை பாலு, திருநெல்வேலி

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து