தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர்,
அன்புடன் வணக்கம். இந்த மனுஜோதி இதழானது மானிட மக்களின் துன்ப, துயர நேரங்களில் இதை வாசிக்கும்போது மனதிலும், சரீரத்திலும் புதிய ஆறுதல் பெற்று பயன் பெறுகிறோம். நன்றி!

– எலிசபெத், ஸ்ரீவில்லிபுத்தூர்

*******

ஐயா, வணக்கம். தாங்கள் எனக்கு அன்போடு அனுப்பிய மனுஜோதி ஆன்மீக புத்தகம் கிடைக்கப் பெற்றேன். குறிப்பாக “தண்ணீர் அருந்துவதின் முக்கியத்துவம்” மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் மிகவும் அற்புதம். மிக்க நன்றி!

– நா. கிருஷ்ணன், சாத்தமங்கலம்

*******

அன்புடையீர், மனுஜோதி இதழ் கிடைத்தது. விமான ஆராய்ச்சி மனப்பான்மையும், பணம் சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும், மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்ற அகங்கார உணர்வும், சுயநலப்போக்கும் மிகுந்து பரவி வரும் இந்நாட்களில் மனிதப் பண்பும், மனிதனுக்கும் இறைவனுக்கும் இயல்பான தொடர்பு நீடிக்க வேண்டும் என்று மனுஜோதி மூலம் வணக்கத்திற்குரிய ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கலியுக கீதை பேருரையைப் பரப்பி
வருகிறீர்கள். இந்த அவசியமான, மிகவும் பயனுள்ள சேவை மேலும் சிறப்புடன் தொடர நல்வாழ்த்துகளுடன் வேண்டுகோளையும் வைக்கிறோம், நன்றி!

– கு. துரைசுவாமி ஐயர், திருவள்ளூர்

*******

என் இனிய அன்பான மனுஜோதி இதழ் ஆசிரியருக்கு, வணக்கம். மனுஜோதி கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். “சகுனம் பார்க்காதே” தகவல் நல்ல
விழிப்புணர்வை தந்தது, பாராட்டுக்கள். ஆசிரியர் உரையில் குறிப்பிட்ட ஒன்றே தேவன் என்பதின் வழிகாட்டு தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தனி
பாராட்டுக்கள். “தண்ணீர் அருந்துவதின் முக்கியத்துவம்” என்ற புதிய தகவல் தண்ணீர் பயன்பாட்டை சிறப்பாக தந்தது அருமை. “பிரார்த்தனையின் சக்தி”,
“தருவது யார்? பெறுவது யார்?” என்ற வாரியார் சுவாமிகள் தந்த சிறிய தகவல் பெரிய கருத்தை தந்தது பாராட்டுக்கள். அடேங்கப்பா! இந்த மாத இதழ் பல பயனுள்ள ஆன்மீக தகவல்களை தந்தது. மிக்க நன்றி!

– S.பொருநை பாலு, நெல்லை

*******

ஐயா வணக்கம். என் வயது 99, எனக்கு ஆன்மீக இதழை படிப்பதில் ஆர்வம் அதிகம். அன்னையும் பிதாவும் நமக்கு முன்னறி தெய்வம். தங்களின் மனுஜோதி இதழ் கிடைத்தது. அடுத்த மாதம் மே மாதத்தில் நான் அங்கே வருகிறேன். நன்றி!

– சிவ. அ.க. நாராயணசாமி, புதுச்சேரி

*******

“பிரார்த்தனையின் சக்தி” நாம் இறைவனிடம் கேட்க வேண்டியது என்ன? என்பதை அறிவுறுத்துகிறது. “பாலாசீர் லாறி முத்துக் கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை அற்புதங்கள்” புருவங்களை மலர வைத்தது. “கடவுளின் வருகை பற்றி வள்ளலார் கூறுபவை” போன்ற கட்டுரைகள் ஆன்மீகப் பசிக்கு தீனி
போடுபவையாக திகழ்ந்தது. நன்றி!

– ஆர். கே. லிங்கேசன், கன்னியாகுமரி

*******

ஓர் ஆங்கிலேய அதிகாரி, தமது மெய்க்காப்பாளருடன் படைத்தளத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கு அவரது படைகளுக்கும், எதிரி நாட்டுப் படைகளுக்கும் மோதல் ஏற்பட்டு சில நிமிடங்களே ஆகியிருந்தன. அங்கு எதிரி நாட்டுப் படை வீரன் ஒருவன் தண்ணீருக்காக விக்கிக் கொண்டிருந்தான். ‘என் தண்ணீர் குடுவையிலிருந்து சற்று தண்ணீர் எடுத்து அவனுக்குப் பருகக்கொடு’ என்று தன் மெய்க்காப்பாளரிடம் அந்த அதிகாரி கூறினார். அந்தக் காப்பாளன் தண்ணீர் கொடுக்கும் நோக்கில் அவ்வீரன் அருகில் குனியும் போது, ஒரு நொடி நேரத்தில் சுடத் தொடங்கினான் வீரன். மயிரிழையில் தப்பித்த காப்பாளன், அதிகாரியை நோக்கி “நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டான். அவன் என்ன செய்தாலும் அவனுடைய தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடு என்றார் அதிகாரி.

கடவுளும் கடமையும்: ஜார்ஷ் வாஷிங்டன் கார்வரிடம் உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் இப்பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்தும் அவனைச் சார்ந்தது என்று எண்ணி இறைவனைத் தொழுவேன். நான் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளும் என்னைச் சார்ந்தவை என்று என்னை நம்புவேன் என்றார். தங்கள் கடமையிலிருந்து தவறாதவர்களை இறைவன் என்றும் கைவிடுவதில்லை.

– T. K. சுப்பிரமணியன், விழுப்புரம்

******

அல்லா, இயேசு, சிவன், திருமால் அனைவரும் சொல்வது சத்தியத்தையும், தர்மத்தையும் கடைப்பிடிப்பது மனிதனின் கடமை என்பதேயாகும். ஸ்ரீமந் நாராயணரும், அவர் வழித்தோன்றல்களும் வாழ்ந்து காட்டியது மற்றும் வாழ்ந்து காட்டுவது அவ்வழி மட்டுமே! ‘எக்குலம் நீ’ எனக் கேட்போரிடம் நான் மனித குலம் என்று சொல்லுங்கள். சராசரி மனிதனுக்கு உள்ளமும், நிறமும் வேறானாலும் உறுப்புகள் ஒன்றே. பல வடிவம் பெற்றிருந்தாலும் வணங்க வேண்டிய இறைவன் ஒன்றே குலம், கோத்திரம், சாத்திரம், சம்பிரதாயம் எட்ட இருந்தே மதித்திடுவோம். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையை மட்டும் கிட்ட இருந்தே ஆதரிப்போம்!

– லெ. நா. சிவக்குமார், சென்னை

*******

Filed under: வாசகர் கருத்து