தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். தங்கள் ஆசிரம செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆன்மீக நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற உங்கள் சேவை போற்றத்தக்கதாக உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரயில் பயணத்தின்பொழுது காஞ்சிபுரத்தில் இறங்கிய ஒரு அன்பர் என்னிடம் தந்த மனுஜோதி என்னை ஈர்த்தது. பிறகு தாங்கள், என் கடிதத்தின் பெயரில் சில புத்தகங்களை அனுப்பினீர்கள். அவை படிக்கவும், கடைபிடிக்கவும் தக்கவை. “அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ்” மேற்கோள் நேர்மையைச் சொல்கிறது. எம்மதத்தையும் உயர்த்தி, தாழ்த்தி எழுதுவதில்லை, அந்தந்த மதத்தின் சிறப்பான விஷயங்களையே சொல்கிறீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 2014 இதழில் வெளியான திரு. ஒளவை நடராஜன் அவர்களின் சொற்பொழிவு அருமை. அருமையான பல விஷயங்களை வெளியிடும் தங்களுக்கு என மனமார்ந்த நன்றி.

– T. K. சுப்பிரமணியன், விழுப்புரம்

******

பேரன்புடையீர், மனுஜோதி இதழில் எல்லா கட்டுரைகளும் மிக மிக அருமை. படித்து இன்புற்றேன்.

– சி. மனோ ரஞ்சித்குமார், புதுக்கோட்டை

*******

ஐயா, “மனுஜோதி” ஆசிரியருக்கு எனது வணக்கத்தைத் தொpவித்து கொள்கிறேன். நான் உங்கள் இதழை எனது நண்பரின் வீட்டில் படித்தேன், உங்கள் இதழில் உள்ள அனைத்து கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. மனிதனாக பிறந்த அனைவரும் இந்த “மனுஜோதி” இதழை படிக்க வேண்டும். அப்போதுதான் மனிதனின் உடல், மனம் என அனைத்திற்குமான தேவைகள் பூர்த்தி அடையும், உங்களின் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற இயக்கத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த இதழையும் பெற விரும்புகின்றேன். நன்றி. இப்படிக்கு தங்கள் மனுஜோதியின் ஒரு துளி,

 – K. கண்ணன், ஜலகண்டபுரம்

*******

என் இனிய அன்பான மனுஜோதி மாத இதழ் ஆசிரியர்க்கு வணக்கம், இம்மாத இதழ் கிடைத்தது, பேரானந்தம், மகா மகிழ்ச்சி அடைந்தேன். 8.9.1987-ல் ஸ்ரீமந் நாராயண சுவாமிகள் சொற்பொழிவு தந்ததும் மிக அருமை, பிறவி பயன் பெற்றேன். பலகோடி நன்றிகள். கடவுள் வருகையும் வள்ளலார் தந்த தகவல் இணைத்து தேன் அமிர்தமாக தந்தது மிக அருமை. படித்து பயன் பெற்றேன். “அடேங்கப்பா” 45-வது கல்கி ஜெயந்தி விழா சிறப்புகள், வண்ண படங்கள் படித்து பாதுகாத்துள்ளேன். நன்றி. K. P. பாலூ அவர்கள் தன் மனம் கவர்ந்த மனுஜோதியை வைரவரிகளாக தந்தது மிக அருமை. ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற தலைப்பு அருமை. எனது பாராட்டுக்கள்.

– S. பொருநை பாலு, திருநெல்வேலி

*******

நான் பொது மக்கள் பயன்பாட்டிற்கான இலவச நூலகம் ஒன்று வைத்துள்ளேன். தொடர்ந்து தாங்கள் அனுப்பிவைக்கும் மனுஜோதி இதழ் கிடைக்கின்றது. இன்று ‘ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இதழ்’
கிடைத்தது. பலபேருக்கு உபயோகமாக இருக்கின்றது. நன்றி!

– K.S.S.S. சண்முகம், விருதுநகர்

*******

அன்புடையீர், ஆழ்ந்த ஆன்மீக வணக்கங்களையும், வாழ்த்துகளையும் ஏற்கவும். மனுஜோதி இதழை அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். தரமான ஒரு தனி இதழாக மனுஜோதி மிளிர்கிறது. இதழ் வளர
எனது இதய வாழ்த்துகளை ஏற்கவும்.

– ந. சங்கமன் சண்முகன் சமன்குமார், நீலகிரி

*******

உங்களுடைய இதழ் என் இதயம் தேடி வந்தது, கோடான கோடி நன்றிகள். உங்கள் மனுஜோதி மாத இதழ் என் மனதை அடிக்கடி திறக்கிறது. பக்கம் 16-ல் ‘கத்தியிடம் தப்பிய கால்’ இதுவரை நான் வாசித்ததைப் பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் கத்தியிடம் தப்பிய கால் மிக அருமையான ஒரு உண்மையை எனக்கு சொல்லி இருக்கிறீர்கள். என் மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். நீங்கள் தவறாமல் எனக்கு புத்தகம் அனுப்பி அன்பை வெளிப்படுத்தினீர்கள். ஆச்சரியத்திலும், அற்புதத்திலும் முன்னணியில் உள்ளீர்கள். இந்த கலியுக காலத்தில் எங்களுக்கு இலவசமாக எங்கள் வீட்டிற்கே நீங்கள் நேரடியாக வருவதுபோல் உள்ளது. இப்படி ஒரு சேவையை யாரும் செய்ய மாட்டார்கள். நிச்சயமாக உங்களால் மட்டுமே முடியும். உங்களது சேவை மிகவும் மகத்தானது பெரும் பாராட்டுக்கள். மிகவும் உற்சாகமாக உள்ளது. பணம் கொடுத்து வாங்கினாலும் இந்த செய்தியைக் காண முடியாது. உங்கள் புஸ்தகத்தில் பல புதிய செய்திகளை படிக்கும்பொழுது பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

– R. சங்கர், வேலூர்

*******

Filed under: வாசகர் கருத்து