தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர்,
வணக்கம். நான் கேட்டுக் கொண்டபடி தங்களின் மனுஜோதி நூலை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். தங்களின் சேவைகள், ஆன்மீக பணிகள் மற்றும் அனைத்துக் கட்டுரைகளும், செய்திகளும், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் ஏற்றது. ஜுன், ஜூலை இதழில் ஆசிரியர் கட்டுரையும், சைவ நெறியை கடைபிடிக்க முடியுமா? கட்டுரையும் மிக அருமை. தங்கள் பணி தொடர இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.

– த. கதிரேசன், திருநெல்வேலி

*******

மனுஜோதி ஆசிரம தலைவர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி. வைரமாவதற்கு விரும்பு, ஆன்மீகப் பார்வையில் திருக்குறள், எப்போது ஞானம் கிடைக்கும் என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து மிக மிக பயனுள்ளதாக இருந்தது.

– ம. பொன்னர், திருச்சி

*******

மனுஜோதி இதழ் கிடைத்து வருகின்றது. இடம்பெறும் கருத்துக்கள் சிறப்பாக இருக்கின்றது. சைவ நெறி, கீதாஞ்சலி, சீடன் ஆன மூடன், எது உண்மையான அன்பு, ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் பயனுள்ளவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

– S. மாதவ குமார், ஈரோடு

*******

மனுஜோதி படித்தேன். சீடன் ஆன மூடன் மிகவும் அருமை. அதை சொன்ன K. P. பாலு அவர்களுக்கு மிகவும் நன்றி. அதேபோல் “எது உண்மையான அன்பு” என்ற தலைப்பு இக்காலத்திற்கும் பொருந்தும் தலைப்பு. அதில் வரும் கதையை இக்காலத்தில் அனைவரும் படிக்க (முக்கியமாக முதியவர்களைப் பற்றி) வேண்டியவை. அதேபோல் தானத்திற்கும் தர்மத்திற்கும் உள்ள வேற்றுமைகளை சொன்ன ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கருத்தும் அருமை. உண்மையை சொல்வது என்றால் மே, ஜுன், ஜூலை 2014 இதழ் ஓர் அரிய பொக்கிஷம். நன்றி!

– பொ. பாண்டியன், மதுரை

*******

ஜூலை மாத மனுஜோதி இதழ் சிறப்பு மிக்க இதழாக பரிணமிக்கிறது. கோடைகால விடுமுறையை சிறப்பாக பிள்ளைகளுக்கு செய்துள்ளீர்கள். எதிர்கால சந்ததிகளை மனிதர்களாக உருவாக்குகிறீர்கள். கலப்புத் திருமணத்தை திட்டமிட்டு செய்துள்ளீர்கள். தங்கள் மாதிரி அனைவரும் ஏற்றுக் கொண்டால் சாதி சமயமில்லாத சமுதாயம் உருவாகும். எல்லோரும் இட ஒதுக்கீடு என்ற நிலையில் போராட்டம் செய்யும் வேலையில் தாங்கள் உண்மையான நியாயமான கடமையை செய்கின்றீர்கள். மனித வாழ்க்கை, மிருகங்களின் வாழ்க்கையின் வித்தியாசத்தை அழகாக குறிப்பிட்டு உள்ளீர்கள். காந்தியடிகள், குருநானக், மாக்சிம் கார்க்கி, கார்பீல்ட் போன்றவர்களின் அறிவுரை சிறப்பு. சீடன் ஆன மூடன் கதை ஓர் சிறப்பான புத்திசாலித்தனமான கருத்து. யாதவ குலம் ஏன் அழிந்தது என்பதை சிறப்பாக எழுதியுள்ளீர்கள். அதுதான் இன்றும் நடக்கிறது. திருக்குறளை ஆன்மீக பார்வையில் சிறப்பாக ஆழ்ந்து எழுதியுள்ளீர்கள். இதழ் மிகவும் சிறப்பு.

– இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

*******

அன்புள்ள ஐயா அவர்களுக்கு, சண்முகராஜ் எழுதும் கடிதம். ஐயா நான் மனுஜோதி இதழ் படித்து வருகிறேன். மனுஜோதி இதழ் வாழ்க்கைக்கு உதவக்கூடிய, ஆன்மீக விஷயங்களை அறிந்துகொள்ள பயனுள்ள நூலாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

– K.M. சண்முகராஜ், சேலம்

*******

ஆசிரியர் அவர்களுக்கு, அறிவார்ந்த ஆன்மீக நற்கருத்துக்களை அள்ளி வழங்கும் மனுஜோதி இதழை பெரிதும் நேசிக்கிறோம். கீதாஞ்சலி, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எது உண்மையான அன்பு? ஆசிரியரின் முன்னுரை எல்லாம் வெகு அற்புதம்.

– R.K. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

*******

Filed under: வாசகர் கருத்து