தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர்,
வணக்கம். மனுஜோதி இதழ் கிடைத்தது. மிகவும் நன்றி. கழுகு தன் குஞ்சுகளை வளர்ப்பது பற்றி, இறைவன் நம் மக்களை பாதுகாப்பதைப்பற்றி ஆசிரியர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார். என்னை மிகவும் கவர்ந்தது. இறைவனின் சித்தமே சால சிறந்தது என்னும் தலைப்பில் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இதன் மூலம் ‘நடப்பது எல்லாமே நன்மைக்கே’ என தெரிந்துகொண்டேன். கத்தியிடம் தப்பிய கால் என்னும் தலைப்பில் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இறைவன் நினைத்து வேண்டியதால் கிருபானந்த வாரியாரின் கால் குணமடைந்து விட்டது. மனுஜோதி இதழ் அனைத்து தலைப்பிலும் நல்ல கருத்துக்களை தருகிறது. “வாழ்க மனுஜோதி, வளர்க மனுஜோதி புகழ்”.

– S. நாகராஜன், கோபிசெட்டிபாளையம்

*********

மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. அதில் “பரீக்‌ஷித் கலியுகத்தை எதிர் நோக்குகிறான்”, “கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?” என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து எனக்கு மிக்க பலனாய் இருந்தது. நன்றி! இனிவரும் மனுஜோதி இதழ்களை அனுப்பி வைக்குமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

– ம. பொன்னர், இனாம்புலியூர்

*********

தங்கள் மனுஜோதி இதழின் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது. தாங்கள் பர்மா சென்று வந்த ஆன்மீக தலையங்கம் ஒரு ஆசிரியருக்குரிய பெருமையோடு இருக்கிறது. மனுஜோதி ஆசிரமம் பற்றி ஆண்டாள் பிரியதர்ஷினி கட்டுரை மேலும் தங்களுக்கு புதிய மெருகு போட்டது போல இருக்கிறது.

– அருள்நம்பி, சென்னை

*********

மனுஜோதி இதழ் கிடைத்தது. மிக்க நன்றி. இதழில் “நடந்தது அந்த நாள்! முடிந்ததா பாரதம்!”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “மகா மோசமான அசுத்தம்” போன்ற கருத்துக்கள் சுருக்கமாக இருந்தாலும் அவற்றின் உண்மைப் பொருள் மிகப் பெரியனவாக உள்ளது. “திருப்பாவை காட்டும் நெறிகள்” என்ற தலைப்பில் கவிஞர் செ. முத்து அவர்களின் கருத்துக்கள் மிக மிக அருமை. “மனுஜோதி ஆசிரமத்தில் வித்தியாசமாய் ஓர் இறைத்தேடல்” – தினகரன் இதழில் மனுஜோதி ஆசிரமத்தின் செய்திகளை படிக்காத என்போன்றோர்க்கு மற்றொரு வாய்ப்பு. கருத்துக்கள் உள்ளத்தை தொட்டது. “கத்தியிடம் தப்பிய கால்” கிருபானந்த வாரியார் சுவாமிகளின் இறை நம்பிக்கையின் ஆழத்தை உணர்த்தியது. மேலும் இதழின் கீழ்வரிசை வரிகளில் (காந்தியடிகள், கலீல் ஷிப்ரான், குருநானக்) ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யாவின் கருத்துகள் முத்தானவையாக உள்ளது. நன்றி!

– P. காளீஸ்வரி, ஈரோடு

*********

நலம், தங்கள் அனைவரின் நலம் அறிய ஆசை. மனுஜோதி கிடைத்தது. கழுகின் வாழ்க்கையை அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக விதத்தில் சிறப்பாகவும் விளக்கியுள்ளீர்கள். இலக்கியத்தை சிறப்பாக தொட்டுள்ளீர்கள். லஹரி கிருஷ்ணா வருகையைப்பற்றி வள்ளலார் கூறியதை சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். புதுமுறை யுக்தி, சூர்யாஜி பண்டிதர் என்பவரின் குடும்பத்தைப் பற்றி எழுதியது சிறப்பு. “நான்முகன்” “பரீக்‌ஷித் கலியுகத்தை எதிர் நோக்குகிறான்” இவைகளை தெளிவாக புரியும்படி எழுதியுள்ளீர்கள். “திருப்பாவை காட்டும் நெறிகள்”, “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” சிறப்பாக இருந்தது. மனுஜோதி சிறப்பின் உச்சத்திற்கு சென்று வருகிறது. வாழ்த்துக்கள்.

– இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

*********

தினகரன் இதழில் மனுஜோதி ஆசிரமத்தைப் பற்றிய கட்டுரையான “மனுஜோதி ஆசிரமத்தில் வித்தியாசமாய் ஓர் இறைத்தேடல்”, மனுஜோதி ஆசிரமத்தில் பொங்கி பிரவாகிக்கும் இறையாண்மை நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக்காட்டி, நாம் போகாமல் இருந்துவிட்டோமே என வாசகர்களை நெகிழ வைக்கிறார்.

– கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

*********

உங்களது மனுஜோதி இதழ் என் இதயத்தை நாடி வந்துள்ளது. நான் அடிக்கடி படித்து என்னை மெருகேற்றிக் கொள்கிறேன். கபீர்தாஸ் வாழ்க்கை வரலாற்றை படித்து ஆச்சரியம் அடைந்தேன். என்ன அவரின் விடா முயற்சி! பல அரிய சாதனைகளை படைத்து உள்ளன. நான் கதைகள் படித்து இருந்தாலும் இந்த கதை என்னை ஆச்சரியம் அடையச் செய்தது. இன்று பலபேர் கல்லூரியில் சென்று படித்தும்கூட அவர்களுக்கு சரியாக படிக்க தெரிவதில்லை. ஆனால் பள்ளிக்கூடம் போகாமலேயே பல சாதனைகளை செய்துள்ள கபீர்தாஸ் ஆச்சரியம், அற்புதம். இந்த தகவலை நீங்கள் புஸ்தகத்தில் வெளியிட்டது மிக அருமை. நான் சோர்வாக இருக்கும்போது மனுஜோதி இதழை ஆராய்வேன். உடனே எனக்கு மன ஆறுதல் கிடைக்கும். இது என்னைப் பெருமை வாய்ந்த மனிதனாக மாற்றுகிறது. மிக்கநன்றி!

என் வாழ்த்துக்கள்.

– R. சங்கர், வேலூர்

*********

2014 பிப்ரவரி – ஏப்ரல் மனுஜோதி இதழ், உள்ளத்தில் உவந்து அசைபோடும் கதை வரும் இசைவான கருத்துக்களைத் தந்தது. பிரபஞ்சப் படைப்புகளைத் தெளிவுபடுத்தும் தலையங்கம். ‘நீ வேண்டும், எனக்கு நீதான் வேண்டும் என்கிற
இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி வரியை நினைவூட்டி, இறையருளின் அருமையைப் புரிய வைத்தது. ‘குஞ்சுபொறிக்கும் வரையிலான பிராணவாயு உள்ளிட்ட உயிர்தேவைகளனைத்தும், சரியாக அளவிடப்பட்டு முட்டைக்குள் வைக்கப்பட்டுள்ளது என்னும் வெளிப்பாடு, சிந்தனையைச் சிறகடித்துப் பறக்கச் செய்கிறது. மனுஜோதி இதழ் தாங்கிவரும் படைப்புகளைச் சுவைக்கும் நெஞ்சங்களின் பிரதிபலிப்பான ‘வாசகர் குரலில்’ விழிப்புணர்வு பெற்றோரின் முகங்கள் தெரிகின்றன. ஒத்த கருத்துடையோர் ஒழுக்க நெறியில் பயணித்து, உலக நன்மைக்கு உழைத்து வளம் சேர்க்கும் உணர்வை வளர்க்கிறது. உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று உள்ளத்தில் கொண்டு, அன்பு செலுத்தும் இரக்கம் சுரக்கும் ஈர இதயத்துடனான மனிதர்கள் பெருகிடும் பாதை போடும் மனுஜோதி ஆசிரமச் சேவைகள், வரலாறு படைப்பவை. மனுஜோதி ஆசிரமத்தையும் அங்கு வரும் அன்பு உள்ளங்களையும் அறிவது, வெப்பம் தணிக்கும் குளிர்மருந்தாக இதமளிக்கிறது. மனக்கிழிசல்களைச் சரிசெய்யும் அறிவூட்டும் பணி, மனிதருக்குச் செறிவூட்டுகிறது.

– நா. முத்தையா, மதுரை

*********

Filed under: வாசகர் கருத்து