தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

அனைத்து வேதங்களின் ஆய்வு இதழாம் மனுஜோதியின் 2013 நவம்பர்-2014 ஜனவரி 25-ஆம் கதிர் படித்தேன். உணவைக் கொடுத்து உணர்வைத் தூண்டும் வள்ளலார் வழியை ‘ஆசிரியர் பக்கம்’ வெளிச்சமிட்டது. தான் நலமாயிருக்க வேண்டுமென்பதை விட தன்னை பார்ப்பவர்களைக் காட்டிலும் உயர்வாயிருக்க வேண்டுமெனும், அறிவு மழுங்கலின் விளைவான ஆசையை நீக்கிட, நெடுஞ்சேரி கிருத்திகா அவர்களது ‘துன்பச் சுமை’ வழிகாட்டியது. ஒப்பீடு என்பது ஆபத்தானது; ஆரோக்கியமற்ற போட்டி அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை உணர உதவியது.

‘கடவுளின் கணக்கு’, ‘காற்றும் கடவுளும்’ ஆகிய அனைத்து உள்ளடக்கங்களும், படிப்பவர் மனங்களில் வெளிச்சமேற்றுபவை. பயன்பாடு அறியாதவர்களிடமும், பயன்படுத்த தெரியாதவர்களிடமும் சென்று சேருபவை சிறப்படைவதில்லை என்பதைச் சுட்டும், மனுஜோதி போடும் பாதையில் பயணித்து, நெஞ்சத்திலிருந்து தூண்டலும், மூளையிலிருந்து வழிகாட்டலும் வகையாகப் பெற்று வளம் பெறும். பக்குவமான மனித இனம் வளர்ந்திடப் பாடுபடும் நிகழ்ச்சிகள் மனங்குளிரச் செய்தன. அம்பை பாலசரசுவதி அவர்களின் கவிதையில், சத்திய நகரெங்கும் கூடும் உயர்ந்த உள்ளங்களில் ஒலிக்கும் ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்கிற குரல், என் உள்ளத்துக்கு விழிப்புணர்வூட்டியது.

 

– நா. முத்தையா, சதாசிவ நகர்

*********

பேரன்புடையீர்,
வணக்கம். த§களின் நவம்பர் மாத மனுஜோதி இதழ் கிடைத்தது. மிகவும் நன்றி. “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” என்ற பகுதியில் பெற்றோர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல், உலக சூழ்நிலையில் எப்படி வாழ வேண்டும் என்ற கல்வியையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வாசகம் தற்கால உலக வாழ்க்கைக்கு அவசியமான அருமையான சொல்.

– பொன். பாண்டியன், மதுரை

*********

நீங்கள் அனுப்பிய மனுஜோதி புஸ்தகம் கிடைத்தது. நன்றாகப் படித்தேன். மற்றவர்களுக்கும் கொடுத்தேன். பலர் அய்யாவை நேரடியாக கண்டதைப் போல சந்தோஷப்பட்டார்கள். ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை விழிப்படையச் செய்து விட்டது. அய்யாவுடைய திவ்விய பிரசன்னத்தைக் கண்டும் இருக்கிறார்கள். சில சூழ்நிலையின் காரணத்தால் அவர்கள் பிருந்தாவனம் வர முடியாமல் இருக்கிறார்கள். அதை மறுக்கவும் முடியாது. அய்யா தாமே அவர்களுடைய கண்களை விழிப்படையச் செய்வாராக!

– V. சுப்பிரமணியம், அச்சங்குன்றம்

*********

ஆன்மீக சகோதரர் அவர்களுக்கு, நலம், நலமே விளைக! தங்கள் மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன். “கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது
என்ன?” என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. இந்த இதழ் சன்மார்க்க அன்பர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். சன்மார்க்க அன்பர்கள் எல்லோருக்கும் இதழ் கொடுக்க விரும்புகின்றேன். அதனால் தயவுசெய்து மனுஜோதி இதழ் அதிகமாக அனுப்பி வைக்கும்படியாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

– R. சுப்பிரமணியம், திருச்சி

*********

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற ஞான தத்துவத்தை முதன் முதலில் இந்த உலகிற்கு சொன்னவர் திருமூலர் அவர்கள். அவரின் இந்த ஞான தத்துவத்தை பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1963-ம் ஆண்டு முதல் ஆசிரமம் அமைத்து செயல்படுத்தி, நடைமுறைப்படுத்தி இன்றுவரையிலும் செயல்பட்டு வருவது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய ஒரு உன்னதமான செயலாகும். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் புகழையும், அவர் கொள்கைகளையும் இன்று வரை செயல்படுத்தி வரும் மனுஜோதி ஆசிரமத்திற்கு நன்றி!

– K. தண்டபாணி, கோயமுத்தூர்

*********

மனுஜோதி ஆசிரியர் அவர்களுக்கும், ஸ்ரீ பாலாசீர் லாறி முத்துகிருஷ்ணா அவர்களின் ஆன்மீக அருளை அனைவருக்கும் பரப்பி வரும் உங்களது குழுவிற்கும் வணக்கங்கள். உங்களது ஆன்மீகச் சேவை மேலும் சிறப்புடன் தொடர நல்வாழ்த்துக்கள். தினகரன் நாளிதழில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆன்மீக மலரில் 11-1-2014 பக்கம் 8,9 மனுஜோதி ஆசிரமத்தில் வித்தியாசமாய் ஓர் இறைத்தேடல் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய கட்டுரை வெளியானது. இதனை நான் வாசித்தேன். மிகவும் அருமை.

– கு. துரைசுவாமி ஐயர், திருவள்ளுர்

*********

ஐயா, 2013- நவம்பர், டிசம்பர், ஜனவரி 2014 மனுஜோதி இதழை படித்தேன். அது இதழாக இல்லை. என் இதயம் அந்த இதயத்தினை சுத்தப்படுத்தி, மனதை தெளிவுபடுத்தும் அருமையான கட்டுரைகள். “புறம் பேசுதல் கூடாது” புறம் பேசுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை கட்டுரை அழகாக தெளிவுபடுத்தியது. அடுத்து “திருமந்திரம் கூறுவது என்ன?” “ஹைதராபாத்தில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டில் திரு. D. பால் உப்பாஸ் லாறி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு” “பாலாசீர் லாறி முத்துகிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை”, “ஆன்மீக பார்வையில் திருக்குறள்”,“மகாவிஷ்ணுவை தரிசித்த துருவன்”, “காற்றும் கடவுளும்” கட்டுரைகள் அனைத்தையும் படித்தாலே நமக்கு மோட்சம் கிடைக்கும். முத்தான வாழ்வு கிடைக்கும்.

– சு. முத்துசாமி, விட்டிலாபுரம்

*********

Filed under: வாசகர் கருத்து