தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » கடவுளுடைய அன்பு நித்தியமானது

கடவுளுடைய அன்பு நித்தியமானது

கடவுளுடைய அன்பு நித்தியமானது, மற்றெல்லா உலக அன்பும் கடந்து போகும் நிழல்களே என்று அன்பைப் பற்றி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். ஒருவர்மேல் எவ்வாறு அன்பு ஏற்படுகிறது? அது நிறத்தினாலோ, அழகினாலோ, முக அமைப்பினாலோ வருகிறதில்லை. ஏன்? ஏனென்றால் இவற்றினால் ஏற்படும் அன்பு கடந்துபோய்விடும். ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதை வளர்க்கிறாள். அந்த குழந்தையிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறாள். ஆனால் இவ்வுலகத்தில் என்ன நடக்கிறது என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார்.
இலங்கையில் திருமதி எஸ்தர் என பெயர் கொண்ட ஒரு பெண்மணியை அறிவேன். ஒருநாள் அவளின் தாயார் வந்தார்கள். இவர்கள் யார் என்று கேட்டபோது, அவர்கள் எங்களுடைய வேலைக்காரி என்றாள். இது எஸ்தருடைய தாயாரின் காதுக்கு வந்தது. அவர்கள் அழுதுகொண்டே அவளுடைய பெருமையைப் பாருங்கள். அவளுடைய கணவன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறதினால் என்னை வேலைக்காரி என்று எல்லோரிடமும் கூறுகிறாள். என்னுடைய தாயார் என்று சொல்ல என் மகள் வெட்கப்படுகிறாள். அவளுடன் வாழ எனக்கு விருப்பமில்லை, எனக்கு இந்தியா செல்ல பயணச் சீட்டு எடுத்து தாருங்கள் என்று அப்பெண்மணி ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் கூறினார்கள்.
தாய் மனது அன்பைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த தாயார் பார்க்க கிராமத்து பெண்மணியைப்போல இருந்ததால், அவளை தாய் என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தாமல் வேலைக்காரி என்கிறாள் மகள். மனிதனின் அன்பு மாறும் தன்மையுடையது. இறைவனின் அன்பே மாறாததாகும்!!!

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து