தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » கடவுளின் வருகை பற்றி வள்ளலார் கூறுவது என்ன ?

கடவுளின் வருகை பற்றி வள்ளலார் கூறுவது என்ன ?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தன் அல்லது மணவாட்டியின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?

கடவுளின் வருகை பற்றிய வள்ளலாரின் அரிய கருத்துக்களை சென்ற மனுஜோதி இதழ்களில் வாசகர்கள் படித்து தௌpவு பெற்றிருப்பீர்கள். இந்த இதழில் கடவுள் எப்படிப்பட்ட பக்தர்களைத் தேடி வருகிறார்? அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும்? என வள்ளலார் அவரது பாடல்களில் வரையறுத்துச் சொல்லியிருப்பவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கடவுளுக்கும், அவரது பக்தனுக்கும் உள்ள உறவை காதலன் (மணவாளன்) காதலி (மணவாட்டி) இடையே ஏற்படும் காதலுக்கு ஒப்பிட்டுச் சொல்வது, இறை ஞானிகள் சிலரின் பழக்கமாக இருந்து வந்துள்ளது.

மகாகவி பாரதியார் கண்ணன் என் காதலன் கண்ணம்மா என் காதலி என்ற

தலைப்புகளில் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஆழமான ஆன்மீகக்

கருத்துக்கள் நிறைந்தவை. ஸ்ரீமத் பாகவதம் 2-ம் பாகத்தில் பிருந்தாவன லீலை ராஸக்கிரிடை என்ற தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களோடு நிகழ்த்திய லீலைகள் எழுதப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடவுளுடைய அன்பு எவ்வளவு உன்னதமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்த எழுதப்பட்டுள்ளதேயன்றி வெறும் மாம்சீகக் காதல் அல்ல என்பதை ஆன்மீக சிந்தையுள்ள மக்கள் அறிந்துகொள்வார்கள். மற்றவர்கள் இதை உணர்ந்துகொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய புலவர் மஸ்தான் சாகிப், தனது பாடல் ஒன்றில் இவ்விதமாகக் கூறியுள்ளார்.

“என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோபேர் உன்றனுக்கே

உன்னை விட்டால் பெண் எனக்கு உண்டோ மனோன்மணியே!”

மாம்சீகக் காதல் பெரியதல்ல, தெய்வீகக் காதலே பெரியது உண்மையானது,

நித்தியமானது என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய நித்திய ஜீவ வார்த்தை சிந்திக்கத்தக்கது.

விவிலியத்தில் சாலொமோன் என்ற ஞானி எழுதிய உன்னதப்பாட்டு என்ற புஸ்தகத்தில் இம்முறையைக் கையாண்டுள்ளார் என்பது வெளிப்படையான ஓர் உண்மையாகும். ஒரு உண்மையான பக்தன் எந்தவிதமாக கடவுளிடம் அன்பு கூற வேண்டும், பக்தி செலுத்த வேண்டும் என்பதை எளிதாக மனதில் நன்முறையில் பதியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த நடைமுறையை ஞானிகள் மேற்கொண்டுள்ளனர் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

நமது வள்ளலார் தமது திருவருட்பா, 6-ம் திருமுறையில், 1057-வது பாடல் முதல் 1066-வது பாடல் வரை மொத்தம் 10 பாடல்களில் பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் என்ற தலைப்பின்கீழ் (76-வது தலைப்பு), பாங்கி அதாவது மணவாட்டியின் தோழி, மணவாட்டியின் காதலனாகிய கடவுளிடம், மணவாட்டியின் குணாதிசயங்களை எடுத்துக்கூறி அவளுக்காகப் பரிந்துரை செய்து, அவளைக் கடவுள் மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுவதாக சித்தரித்துக் காட்டியுள்ளார். இது நமது சிந்தனைக்கும்,

ஆத்துமாவுக்கும் அருமையான விருந்தாக உள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட சில

பாடல்களையும் அதன் பொருள் விளக்கங்களையும் நாம் இப்போது காண்போம்.

திருவருட்பா 6-ம் திருமுறை தலைப்பு எண் 76 – பாடல் எண் 1057 “பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்” வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக இந்தப் பாடல் பதம் பிரித்து தரப்பட்டுள்ளது அம்மதவேள் கணை ஒன்றோ, ஐங்கணையும் விடுத்தான், அருள் அடையும் ஆசையினால், ஆருயிர்தான் பொறுத்தாள் இம்மதமோ, சிறிதும் இலாள். கலவியிலே எழுந்த ஏகசிவபோக வெள்ளத்து, இரண்டுபடாள், எனினும் எம்மதமோ எக்குலமோ என்று நினைப்புளதேல், இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே சம்மதமோ தேவர் திருவாய் மலர வேண்டும் சபையில் நடம்புரிகின்ற தனிப் பொpய துரையே தெளிவுரை: மணவாட்டியின் தோழி (பாங்கி) தனது தோழியாகிய மணவாட்டியின் (தலைவியின்) குணங்களை உரைத்தல்.

அந்த அழகிய மன்மதனாகிய காமதேவன், கடவுளுடைய மணவாட்டியின்மீது, ஒரு அஸ்திரத்தை மட்டுமா எய்தான்? ஐந்து அஸ்திரங்களையும் மணவாட்டியின்மீது பிரயோகித்தான். ஆனாலும் கடவுளாகிய தனது காதலனின் அருளை அடைய வேண்டும் என்ற தீவிரமான தனது பக்தியால், அவர்மேல் அவள் கொண்ட களங்கமற்ற அன்பினால், தனது அருமையான உயிர்க்கு வரும் இன்னல்களை, அவர் பொருட்டு சகித்துக் கொண்டாள். இந்த உலகத்தில் கடவுள் பெயரால் மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள

இந்த மதங்களில் சிறிதளவுகூட இவளுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. கடவுளுடைய ஆவியோடுகூட, இவளது ஆவியும் கலந்து ஐக்கியம் கொண்டுவிட்டது. அதன்மூலமாக அந்த ஒரே கடவுளின் அன்பு வெள்ளத்தில், ஆனந்த சாகரத்தில் திளைத்து விட்டாள். அதற்கு மாறுபட்டு எதுவும் செய்யமாட்டாள். என்றாலும் இவள் எந்த மதத்தையாவது சேர்ந்திருப்பாளோ, அல்லது எந்த சாதியையாவது சேர்ந்திருப்பாளோ என்று கடவுளாகிய

உமக்கு சந்தேக நினைவுகள் இருக்குமென்றால்….. நான் கூறுவது என்னவென்றால்: இவள் மதமும், சாதியும் எல்லாமே கடவுள்தான். ஆகவே இவளை மணம் முடிக்க உமக்குச் சம்மதமோ? கடவுளே உமது திருவாய் மலர்ந்து அதைச் சொல்ல வேண்டும். மணவாட்டி சபையில் (ஞான சபையில்) திருவிளையாடல் புரிகின்ற தனக்கு நிகரில்லாத பெரிய சீமானே! உம்மை நான் வேண்டுகிறேன்.

விளக்கம்: ‘அம்மதவேள்’ என்பது மன்மதனைக் குறிக்கும். மன்மதன் என்றால் மனதிற்கு கிளர்ச்சியைக் கொடுப்பவன், மனதைக் கலக்குவிப்போன் என்று அர்த்தமாகும். ஐங்கணை என்றால் ஐந்து அம்புகள் அல்லது அஸ்திரங்கள் என்பதாகும். இவனது ஐந்து அஸ்திரங்களாக குறிப்பிடப்படும் புஷ்பங்கள் 1. தாமரை 2. மாம்பூ 3. வாழை 4. முல்லை 5. நீலோற்பவம். இந்த பஞ்ச கணைகளைக் கொண்டு அவன் செய்யும் தீய செயல்கள் 1. பெருமயக்கு 2. சிந்தாகுலம் (மனக்கவலை) 3. மோகனம் (மயக்கம்) 4. சந்தாபனம் (வெப்பமேற்றல்) 5. வசீகரணம். இவற்றால் மனிதற்கு ஏற்படும் துன்பங்கள்

1. சுப்பிரயோகம் – சொல்லும் நினைவுமாயிருத்தல் 3. சோகம் 4. மோகம்

2. விப்பிரயோகம் – நீண்ட பெருமூச்சு விடுதல் 5. மரணம்

மன்மதனின் கிரியைகளுக்குத் துணையாய் கருவியாய் இருப்பவை: வசந்த காலம், நிலா, மணிமேடை, மணற்குன்று, பூஞ்சோலை, சந்திரோதய காலம், புஷ்பம், வாசனை, அழகு முதலியவையாகும். நவீன காலத்தில் மன்மதனின் கருவிகளாக, செல்போன், கேபிள் டி.வி, இரகசிய கேமராக்கள், சினிமா முதலியவை செயல்படுகின்றன என்பது வெளிப்படையான ஓர் உண்மை. ஆகவே மன்மதன், கலியின் (சாத்தானின்) பிரதிநிதியாக கிரியை செய்கிறான். அஸ்திரங்கள் அல்லது கணைகள் என்றால் கலியன் அல்லது சாத்தான், ஒருவனது உள்ளத்தில் தோற்றுவிக்கும் பொல்லாத நினைவுகளாகும். ஐம்பொறிகளையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) தாக்கக்கூடிய

ஐந்து அஸ்திரங்களையும் மன்மதன் தொடுத்தாலும், கடவுளின் உண்மையான

பக்தன் (மணவாட்டி) அவரது அன்பில் மிக உறுதியாக இருக்கிறான். அந்த அன்புக்கு விரோதமாக அவன் எதுவும் செய்யமாட்டான் என்பதையே வள்ளலார் இங்கு நமக்கு உணர்த்துகிறார். மதத்திற்கும், கடவுளுடைய பக்தனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு ‘இம்மதமோ சிறிதும் இலாள்’ என்ற வரியின் மூலமாக தெள்ளத் தெளிவாக வள்ளலார் வெளிப்படுத்தியிருக்கிறார். “இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே” என்ற வரியின் மூலமாக கடவுளோடு பூரணமாக கலந்து ஐக்கியம் கொண்டவனுக்கு சாதி, மதம் என்ற பேதங்கள் இல்லை என்ற உண்மை பெறப்படுகிறது.

அருட்பா ஒன்றில், “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் “சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி” என்றும், மனுமுறை கண்ட வாசகம் என்ற நு]லில் பேய்களின் பட்டியலில் “மதம் என்னும் வலக்காரப் பேய்” என்று சேர்த்திருப்பதும் வள்ளலார் மதங்களுக்கு எவ்வளவு து]ரம் விரோதமாக இருந்தார் என்பதைத் தெளிவாக காண்பிக்கிறது. ‘வலக்காரம்’ என்பதற்கு ‘பொய்’ என்று அர்த்தமாகும்.

                                                      – தொடரும்…

– சா. செல்லப்பாண்டியன், மனுஜோதி ஆசிரமம்

 

Filed under: ஆன்மீக கட்டுரைகள்