தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » ஏழாம் உபதேசம்

ஏழாம் உபதேசம்

தேவனுடைய முதற்பேறானவர் – ஞானம் – ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம்

என்னென்ன விதமான குணங்கள் இருந்தபோதிலும், என்னால் பிறப்பிக்கப்பட்ட சாத்வீகர்களும், பூமிக்குரியவர்களான ரஜோ குணமுள்ளவர்களும், காமத்தினால் தந்தை தாய்க்கு பிறந்தவர்களும், மிருகத்தன்மை உடையவர்களும், உலகத்தினால் பிறந்தவர்களும், தாமஸ குணம் உடையவர்களுமாகிய இவர்கள் அனைவரும் என்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அறிவாயாக.

ஆனால் உண்மையில் நான் அவர்களிடம் இல்லை, அவர்களும் என்னுள் இருப்பதில்லை (மூன்று பிரிவினரும் கடவுளிடம் இருந்து தோன்றுகின்றனர்).

சாத்வீக குணம், ரஜோ குணம் மற்றும் தாமஸ குணமுள்ள இந்த மூன்று சுபாவங்கள் அல்லது குணங்களால் என்னுடைய முழு சிருஷ்டிப்பானது மாயமானவைகளால் அல்லது தவறான நம்பிக்கையினால் நிறைந்திருக்கிறது.
 
ஆகவேதான் அவர்கள் என்னை அறிந்துகொள்ள தவறுகிறார்கள். நான் இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன், தனிப்பட்ட  குணமுடையவன்,  நான் அழிவற்றவன். எவர்கள் இந்த மூன்று குணங்களையும் விடுவதில்லையோ அவர்கள் இந்த அற்புதமான என்னுடைய மகிமையை அடைவது அரிதாகும்.

ஆனால் என்னால் முன் குறிக்கப்பட்டவர்கள் என்னையே பூஜித்து, அவர்கள் மாத்திரமே மரணத்தை மேற்கொண்டு என்னுடைய மகிமையைக் காண்பார்கள். தங்களுடைய சொந்த அறிவுடையவர்களும், மாயையினால் இழுத்துச் செல்லப்பட்டவர்களும், சாத்தானுடைய குணமாகிய கண்டுவிசுவாசிக்கிற தன்மையை தழுவுகிறவர்களும் ஆகிய அப்படிப்பட்ட மதியீன நீசர்கள் என்னுடைய மகிமையை காண்பதில்லை.

அர்ச்சுனா பூலோக செல்வங்களை நாடுகிறவர்கள், துன்புற்றவர்கள், பூலோக ஞானத்தை தேடுபவர்கள் மற்றும் ஞானம் அல்லது பரமபுருஷரின் பரிசுத்த ஆவியை (ஜீவ ஆத்மாவைப்) பெற்றவர்கள் ஆகிய நான்கு வகையான மனிதர்கள் என்னை வணங்குகிறார்கள்.

******

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை