தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » ஏழாம் உபதேசம்

ஏழாம் உபதேசம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும்

இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது

 

தேவனுடைய முதற்பேறானவர்                                                      ஞானம்                                                    ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம்

இவர்களுள் பரிசுத்தாவியினால் (ஜீவ ஆத்மா) நிரப்பப்பட்டவனும், என்னுள் நிலைபெற்றவனும், என்னிடம் பிரத்யேகமான பக்தியை உடையவனும் சிறந்தவன் ஆகிறான். நான் அவனுக்குப் பிரியமானவன், அவனும் எனக்குப் பிரியமானவன் (ஆதிவேள்வியில் பங்கெடுத்தவர்கள்).

இவர்கள் எல்லோரும் சிறந்தவர்களாக இருப்பினும் என்னுடைய  பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட மனிதனும், ஆதிபலி அல்லது அழிவற்ற யோகத்தில் பங்கெடுத்தவனும் என்னுடைய சுயமே அவனுக்குக் கொடுக்கப்பட்டதுமான அந்த பக்தன், மனதையும் அறிவையும் என்னிடத்தில் அர்ப்பணித்து, என்னிடத்தில் மட்டுமே உறுதியாக நிலைபெற்றிருந்தால் அவன் உயர்ந்த லட்சியத்தை அடைகிறான்.

நான் கடைசியாக வந்திருக்கும் அவதாரத்திலே, பரமபுருஷராகிய நானே முடிவு என்றும் என்னாலே இவையனைத்தும் உண்டாயின என்றும் தெளிவடைந்த ஆத்மா உணர்ந்து, என்னை வணங்குகிறான்.

அத்தகைய மகத்தான தெளிவுள்ள ஆத்மாவை கண்டுபிடிப்பது அரிது. நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன். நானே ஜமந் நாராயணர் – அல்லா – கிறிஸ்து இயேசு – தாவீதின் குமாரனாக இருக்கிறேன். நான் இறைவனின் உண்மை உருவம்.

ஆனால் தங்களுடைய சொந்த அறிவால் உண்டாகும் ஆசைகளால் கவரப்பட்டவர்கள், தங்களுடைய கண்டுவிசுவாசிக்கிற தன்மையினால் தூண்டப்பட்டு என்னுடைய மற்ற உருவங்களையும் மற்ற தெய்வங்களையும் வணங்குகிறார்கள். ஒவ்வொரு அவதாரத்திற்கேற்ப சட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு, தமக்குச் சொந்தமாக ஒரு மதத்தை உண்டாக்குகிறார்கள்.

உதாரணமாக என்னை இராமர் என்ற பெயரால் அழைப்பவர்கள், திரேதா யுகத்திற்குரிய பலன்களைப் பெறுகிறார்கள். என்னை கிருஷ்ணர் என்ற பெயரால் அழைப்பவர்கள், துவாபர யுகத்திற்குரிய பலன்களைப் பெறுகிறார்கள். என்னை இயேசு என்ற பெயரால் பூமியில் அழைப்பவர்கள், அந்த காலத்திற்குரிய பலன்களைப் பெறுகிறார்கள். ஆனால் என்னை உணர்ந்துகொண்டு, என்னுடைய உண்மை உருவத்தை வணங்குபவர்கள், சாகாமையை அடைவார்கள்.

******

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை