தமிழ் | తెలుగు

» கவிதைகள் » எது வாழ்வு?

எது வாழ்வு?

மக்களெல்லாம் ஒன்றென்பது வாழ்வு – தினம்

மனுஜோதி இதழைப் படிப்பது வாழ்வு!

அக்கறையாய் அன்பை வளர்ப்பது வாழ்வு-மனிதன்

ஆண்டவன் ஒருவனே என்றுணர்வது வாழ்வு!

எட்டுத்திசையும் லஹரியைப் பரப்புவது வாழ்வு – மக்கள்

ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வது வாழ்வு!

இட்டுண்டு வாழ்வது வாழ்வு – மானிட மக்கள்

இறவாப் பெருநிலை பெறுவது வாழ்வு!

சத்திய நகரம் வருவது நல்ல வாழ்வு – மனிதன்

சாந்தம் சமாதானத்துடன் வாழ்வது வாழ்வு!

நித்தமும் தியானம் செய்வது வாழ்வு – மக்கள்

நித்திய ஜீவனைப் பெறுவது வாழ்வு!

பைபிளைப் படிப்பது சிறந்த வாழ்வு – நாளும்

பகவத் கீதை படிப்பது உயர்ந்த வாழ்வு!

வையகம் புகழ வாழ்வது வாழ்வு – லஹரியை

வாழ்த்திப் பாடுவது சிறந்த வாழ்வு!

தேவாசீரின் போதனையைப் படிப்பது வாழ்வு – தினம்

திருக்குறள் திருக்குர்-ஆனைக் கற்பது வாழ்வு!

கோபத்தைப் போக்கி வாழ்வது வாழ்வு – மனிதன்

குறிக்கோளுடன் வாழ்வதே மாண்புடைய வாழ்வு!

சிரித்து வாழ்வது சிறந்த வாழ்வு – லஹரி அய்யாவை

சிந்தனை செய்வது நல்ல வாழ்வு!

அறியாமை போக்கும் உயர்ந்த வாழ்வு – லஹரி நாயகனின்

அறிவான நு]ல்களைப் படிப்பதும், கேட்பதும் வாழ்வு!

புலவர் திருக்குறள்

இரா. நடராசன், தென்காசி

Filed under: கவிதைகள்