தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » இறைவன் தம்முடைய மக்களுக்கு சட்டத்தை எதற்காக கொடுத்திருக்கிறார்?

இறைவன் தம்முடைய மக்களுக்கு சட்டத்தை எதற்காக கொடுத்திருக்கிறார்?

இறைவன் தன்னுடைய மக்கள் கலியனின் மாய வலையில் சிக்கிக் கொள்ளாதபடி வளமோடு வாழ்வதற்காக வேதங்களில் அநேக சட்டதிட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார். இறைவனுக்கு ஒரு சொந்த சட்டம் இருக்கிறது. மனிதன் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் நாம் பிரச்சினைக்குள்ளாவோம். இந்த பூமியிலுள்ள அரசாங்கத்தில் மனிதர்களின் நலனுக்காக சட்டதிட்டங்கள் இருக்கிறதுபோல இறைவனுடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டவர்கள் சுபீட்சமாக வாழ்வதற்காகவும் அநேக சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மக்கள் எப்பொழுதும் அவருக்கு கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர் கட்டளையிடும் எதையும் அவர்கள் செய்வார்கள். அதுதான் தேவலோக மக்களின் தகுதி மற்றும் குணாதிசயமாகும். நூறு சதவீதம் அவருடைய சட்டங்களுக்கு அடிபணிவதினாலும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதினாலும் நாம் நீதிமான்களாகிறோம். இறைவனுடைய சட்டமானது அறத்தையும், நன்நெறியையும் மக்களுக்குப் போதிக்கிறது. சட்டத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் அவரால் தண்டிக்கப்படுவார்கள். அன்பினால் இறைவனின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தாங்களே நியாய விதிகளும் சட்டமுமாக இருக்கிறார்கள் என்பதை முதலாவதாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மாணவன் ஒழுங்காக இல்லையென்றால், அவனுக்கு அடி கிடைக்கின்றது. அதுதான் சட்டமாகும். நீங்கள் சட்டத்திற்கு கீழ்ப்படியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். ஆனால் ஒரு சட்டம் இருக்கின்றபோது, மற்றொரு வழியில் இறைவனின் கருணையும் அவருடைய மக்களுக்கு இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை நியாயப்பிரமாணத்துடனும், கட்டளைகளுடனும், நியாயங்களுடனும் அளந்து பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இரயிலில் செல்லவிருந்தால், உங்களுடைய பயணச்சீட்டை முன்பே வாங்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். இரயிலில் ஏறிய பின் ஓ! நான் பயணச்சீட்டை தவறவிட்டு விட்டேன் என்று கூறுவதல்ல. இரயில் கிளம்பிய பின் நீங்கள் உங்களுடைய பயணச் சீட்டை மீண்டும் பெற முடியாது.

தொகுப்பு: C. எல்சன் ஜோசப்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து