தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள் » இறைவனுக்கு எட்டு மலர்கள்

இறைவனுக்கு எட்டு மலர்கள்

சென்ற இதழில் சத்தியத்தைக் கடைப்பிடித்தல் என்ற மலரைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் ஞானத்தை அடைய தீவிரமான ‘உழைப்பு’ என்ற தலைப்பைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக அறிவை அதிகரிக்க இக்காலத்தில் பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவை அவர்கள் பெறுவார்கள்.  மருத்துவத்தைப் பற்றிய அறிவு, கட்டட கலையைப் பற்றிய அறிவு, நாட்டிய கலை, ஓவியக்கலை,

இசையறிவு என்று இந்த அறிவைப் பெறவே மனிதன் சிறுவயது முதல் பாடுபடுகிறான். ஆனால் ஞானத்தை அடைய வேண்டுமென்று யாராவது நினைக்கிறார்களா? ‘ஞானம்’ என்ற வார்த்தைக்குப் பலபேர் பலவிதமான

வியாக்கியானங்கள் கொடுத்துள்ளார்கள். புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார் என்று கூறுகிறார்கள். இந்த உலக மக்களின் துன்பத்திற்கான ஆணிவேர் எது என்பது புத்தருக்குப் புலப்பட்டது. துன்பத்திற்கு காரணம் ஆசைதான் என்கிறார் புத்தர். ஆசை, கோபம், பேராசையை வென்றுவிட வேண்டுமென்று பகவத்கீதை கூறுகிறது. ஆசைக்கு அளவில்லை, போதுமென்ற மனநிலைக்கு

வருவதேயில்லை. அதனால்தான் தாயுமானவர்,

“ஆசைக்கோர் அளவில்லை

அகிலமெல்லாம் கட்டி ஆளினும்

கடல்மீதிலே ஆணை செலவே விரும்புவார்”

என்று பாடினார். மண்டலங்களையெல்லாம் கட்டி அரசாளும் மாபெரும் சக்கரவர்த்தியாக இருப்பவனுக்குக்கூட நிறைவு கிட்டுவதில்லை. பூமியையெல்லாம் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்துவிட்டோம். இன்னும் கடல்

பாக்கியிருக்கிறதே! அந்த சமுத்திரத்தின் பரப்பும் சர்வாதிகாரத்துக்கு உட்பட்டதாக ஆக வேண்டுமே! என்று மேலும் ஆசை அதிகரித்துக் கொண்டே செல்லுமாம்.

ஆக ஆசை பேராசையாகிறது. ஆசைப்பட வேண்டாம் என்று புத்தர் சொல்லாமல், அளவாக ஆசைகொள்; அளவாக சுகங்களை அனுபவி என்கிறது பௌத்த மதம். ஆனால் ‘ஞானம்’ எப்படி கிட்டும் என்பதற்கு,

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கூறும் விளக்கத்தை காண்போம். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பது ஞானத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ‘ஞானம்’ என்பது இறைவனின் பெயராகும். ஞானத்தின் முழு உருவமாக திகழ்பவர் இறைவன் ஆவார். ஞானத்தை அடைய வேண்டுமென்றால் இறைவனை அடைய வேண்டும் என்பது அர்த்தமாகும். இறைவனை அடைவதற்கான வழிகளை மனிதனாக வந்த கல்கி மகா அவதாரம்

ஸ்ரீ லஹரி கிருஷ்;ணா கூறியுள்ளார்.

முதலாவதாக மனிதன் சுய சித்தத்தை விட்டு விட வேண்டும். மனிதனுக்கு மட்டுமே இது எனக்கு விருப்பம்,  இது எனக்கு வேண்டாமென்று தெரிந்துகொள்ளும் அறிவு (Choice)  படைத்தவனாக இறைவன் சிருஷ்டித்துள்ளார்.

அந்த அறிவினால் அவன் தான் விரும்பியதையெல்லாம் செய்கிறான். ஆனால் அவன் சுய சித்தத்தை விட்டு விட்டு, இறை சித்தத்தை அறிந்துகொண்டு, அதை

செயல்படுத்த வேண்டும் என்ற அறிவு ‘ஞானம்’ என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாவதாக இறைவன்மேல் சார்ந்து வாழ்வதே

ஞானத்தின் ஆரம்பமாக இருக்கிறது என்று விவிலியம் கூறுகிறது. பிள்ளைகள் பெற்றோர்மீதும், பெற்றோர் பிள்ளைகள்மீதும், கணவன் மனைவியின்மீதும், மனைவி கணவன்மீதும் சார்ந்திருக்காமல் வாழ வேண்டும். இறைவன்மீதே சார்ந்து வாழ வேண்டும். ஒரு மனிதன் இன்னொருவன்மீது சார்ந்திருப்பதை இறைவன் விரும்புகிறதில்லை. சார்ந்திருத்தல் என்பதுதான் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள அன்பு பாலமாக இருக்கிறது. இறைவன்மீது சார்ந்திருத்தல் என்பது மனிதனை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது.

ஞானமாகிய இறைவனை அடையச் செய்கிறது.

மூன்றாவதாக ‘ஞானம்’ என்பது இறப்பை வெல்லும் கலையாகும். இது இறைவனிடம் மட்டுமே உள்ளது. ஒருவன் ஞானத்தை பெற்றுவிட்டான் என்று சொன்னால், இறப்பை ஜெயிக்கும் வழியை கண்டு பிடித்தவனாக இருக்க வேண்டும். எளிய முறையில் சொல்ல வேண்டுமென்றால், இறைவனுக்குக் கீழ்ப்படிவதினால் இறப்பை ஜெயிக்கும் வழியில் சென்று, ஜீவன் முக்தியை அடைகிறான். இதற்கு மனிதன் தீவிரமாக உழைக்க வேண்டும். இறைவன்

விதித்த கட்டளைகளை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றை அறிந்துகொள்வதே மிகக் கடினமான காரியமாகும். அவற்றை அறிந்த பின்னர், அவற்றை கடைப்பிடிப்பது அதைவிட மிகக் கடினமானதாகும். ஆனால் இறைவன்பால் அன்புள்ளவர்களுக்கு இது சுலபமான காரியமாகும். அன்பில்லாத இடத்தில் எந்த கட்டளையும் கடினமானதாகும். அன்பிருந்தால் அது

மிகச் சுலபமானதாகி விடுகிறது. கீழ்ப்படிவதினால் இறைவனின் அன்பை மனிதன் பெறுகிறான். அன்புடையவன் இறைவனுக்குக் கீழ்ப்படியும்போது,

இறைவன் அவனுக்கு சாகாத வரத்தை அருளுகிறார். இதுவே அவனை இறைவனோடு என்றென்றும் வாழச் செய்கிறது. இறைவனுடன் வாழ்வதற்காகவே மனிதனைப் படைத்தான். அதை அவன் அடைவதே ஞானமாகும். எட்டு விதமான புஷ்;பங்களான அApம்சை, எளிமையான

வாழ்க்கை, தவ வாழ்க்கை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்வது, மன்னிப்பு, மனதிலே நிம்மதி சத்தியத்தைக் கடைப்பிடித்தல், ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது, ஞானத்தை அடைய தீவிரமான உழைப்பு இறைவனுக்குப்

பிரியமானவை. எண் குணங்களை கடைப்பிடித்து வள்ளுவர் கூறிய எண்குணத்தானாகிய ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்;ணாவை அடைவோமாக!

Filed under: ஆன்மீக கட்டுரைகள்