தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » இறைநீதி

இறைநீதி

ஒரு முதியவர் அல்லது பெரியவர், ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால், அவன் அவருக்கு உரிய மரியாதையை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும். பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்குமாம். ஒரு நல்லவர் நம் வீட்டிற்கு வந்தால், அவரை வரவேற்று உட்காரும்படி கூற வேண்டும். பின்னர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அவர் நலன் விசாரித்த பின்பு அவர் வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்று விதுர நீதி கூறுகிறது. பெற்றோருக்கு மரியாதை அளிப்பதைப் பற்றி ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ என்று ஒளைவை மூதாட்டி கூறியுள்ளார். விவிலியத்தில் பெற்றோருக்கு மரியாதை அளித்தால்தான் பிள்ளைகள் நீடூழி வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் முதியோருக்கு மரியாதை அளிப்பதைப்பற்றி ஸ்ரீமந் நாராயணர் பல கருத்துக்களை கூறியுள்ளார்.

பெற்றோரை மதியாதவனை தற்கொலை செய்யும்படி தூண்டச்செய்யும் எண்ணம் அவனுடைய மனதிற்குள் புகுந்துவிடும். அதினால் அவர்கள் சீக்கிரத்தில் அதாவது அற்பாயுசில் இறப்பார்கள். சீக்கிரமாக இறப்பதற்கு பெற்றோரை மதிக்காமல் இருப்பதுதான் மருந்தாகும். ஒரு குழந்தை மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்வதைப்போலதான் நாமும் வளர வேண்டும். உடனடியாக நாம் வளர்ந்து பெரியவர்களாக முடியாது. நாம் வாழ்க்கையில் மேடு பள்ளங்களைக் கடந்து வர வேண்டும். அதினால்தான் நாம் அனுபவப்பட்ட முதியோருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெற்றோருக்கும், முதியவர்களுக்கும் மரியாதை அளிக்க தெரிந்திருந்தால்தான் இறைவனுக்கு மரியாதை அளிக்க ஒருவனால் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு குடும்பத்தை கணவன்தான் வழிநடத்த வேண்டும். கணவனின் சொல்லை மனைவியும், பிள்ளைகளும் மதிக்க வேண்டும். ‘எண்ணுவது உயர்வு’ என்பதை நாம் அறிவோம். மற்றவர்கள் நம்மைப் பார்க்கிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் இருந்தால்தான் நாம் ஆணவம் கொள்ள மாட்டோம். பிள்ளைகள் பெற்றோரையும், தங்களைவிட வயதில் பெரியவர்களை மதிக்கும்போதும், மனைவியும் பிள்ளைகளும் கணவனை மதிக்கும்போதும் இறுதியில் நாம் மற்றவர்களின் நம்பிக்கையையும், சூழ்நிலைகளையும், கொள்கைகளையும் மதிக்க கற்றுக்கொள்வோம். அப்பொழுது ஒருவரையொருவர் மதிப்பதினால் தானாகவே ஒரே குடும்பம் என்ற எண்ணம் தழைத்தோங்கும். ஆங்கிலத்தில் இதற்கு ஒரு நல்ல பழமொழி இருக்கிறது. ‘மரியாதை கொடுத்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்’ என்பதைப்போல நாமும் அவ்வாறு செய்யலாமே!

தற்காலத்தில் உணவை அதிகமாக விரயம் செய்கிறார்கள். உணவு உண்பதற்கு முன் இந்த உணவை தந்ததற்கு நன்றி என்று நாம் இறைவனிடம் கூற வேண்டும். அதன்பின்னர் நீங்கள் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, கீழே வைத்திருக்கும் உணவை எடுத்து சாப்பிட வேண்டும். உணவுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. நாம் உணவிற்கு மரியாதை அளிக்கும்போது அது இறைவனுக்கே அளிக்கப்படும் மரியாதையாக கருதப்படும் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்.

✡✡✡✡✡✡

 

Filed under: ஆன்மீக கருத்து