தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » இன்றைய கோயில் வழிபாடு நிலை

இன்றைய கோயில் வழிபாடு நிலை

ஏப்ரல் 2-2014, லண்டன்:
ஒரு கோயிலில் பீர்தான் வழிபாடு செய்யப்படுகின்றது. இன்னொரு கோயிலில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றது. சமீப காலமாக பிரிட்டனில் புதுவிதமான மாற்றம் நடைபெற்று வருகிறது.

மதப்பற்று குறைந்ததினாலும், வரலாற்றுச் சின்னங்களை பராமாரிக்கும் விலை அதிகமானபடியினால் அநேக கோயில்களுக்கு புது வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களை கட்டியவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள பிரஸ்பெட்டோரியன் கோயிலின் வெளிப்புறம் மாற்றப்படவில்லை. இக்கோயில் 1902-ம் வருடத்தில் கட்டப்பட்டது. உள்ளேயோ இது ஒரு பப். இது ஒரு கோயிலாக இருந்திருந்தால் 2,3 பேர்தான் வருவார்கள். ஆனால் இப்பொழுதோ வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் பிரிட்டனில் குறைந்து வருகிறது. கோயில் அதிகாரிகள் அவற்றை பராமாரிக்கும் வேறு வழிகளை யோசிக்க பலவந்தத்திற்குள்ளாயிருக்கிறார்கள். மேன்செஸ்டாரில் உள்ள கோயில்
மலையேறும் சென்டராகவும், பிரிஸ்டோலில் உள்ள கோயில் சர்க்கஸ் பள்ளியாகவும் மாறியிருக்கிறது. வேறு சில கோயில்கள் சூப்பர் மார்க்கெட்டாகவும், நூலகமாகவும், சீக்கியர்களின் ஆலயமாகவும், ஆடம்பர வீடுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

நன்றி்: தி டைம்ஸ் ஆப் இந்தியா

*******

Filed under: பத்திரிகை செய்திகள்