தமிழ் | తెలుగు

» கவிதைகள் » இன்ப நிலை

இன்ப நிலை

நெல்லையிலே நீயமைத்தாய் ஆசிரமம்

நல்லபேரை நீயெடுத்தாய் சீக்கிரம்

சொல்லெடுத்து நீ வடித்த நூல்களை

சேகரித்து வைப்பதொரு இன்பமே

விஸ்வரூ தரிசனத்தைக் காட்டினாய்

விசுவாச ஜீவியத்தை போதித்தாய்

மனுஜோதி ஆஸ்ரமத்தை நாடினால்

மனதிலொரு இன்பவொளி தோன்றுமே

மனித வாழ்வின் தத்துவத்தை ஓதினாய்

மனிதருக்குள் நம்பிக்கையை ஊட்டினாய்

இறைவனிடம் சார்ந்து வாழ வேண்டினாய்

இருளகற்றி இன்ப நிலை காட்டினாய்

கே.வி. ஜெனார்த்தனன், காஞ்சிபுரம்

✡✡✡✡✡✡✡



 

Filed under: கவிதைகள்