தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் எச்சரிக்கை

இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் அநேக உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டன. இந்த சக்தி வாய்ந்த இப்பூகம்பத்தின் காரணமாக பாகிஸ்தானில் ஜுவேடர் நகரத்தின் கடலோரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், 175 மீட்டர் நீள அகலம் கொண்ட நிலப்பரப்பானது அரபிக்கடலில் வெளிப்பட்டது. 18 முதல் 20 மீட்டர் உயரம் கொண்ட இந்த புதிய தீவிலிருந்து, தீப்பற்றக்கூடிய வாயுவானது வெளியேறத் துவங்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த விஷ வாயுவினால் கடலில் அதிக அளவில் மீன்கள் இறந்துள்ளது என ஆங்கில செய்திப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின.

இதேபோல் 2005-ம் வருடம், அக்டோபர் 8-ம் தேதி பாகிஸ்தானில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த பூகம்பத்தில் பாகிஸ்தான் துருப்புகள் 75 ஆயிரம் பேர் பலியாயினர் என உங்களில் அநேகர் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் பூகம்பம் நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக அங்கு ஜனாதிபதியாக இருந்த முஷாரஃப்பும் நம்முடைய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதாவது அவர்கள் ஏவுகணைகளை பரிசோதிக்க வேண்டுமென்றால் அதன்முன்னதாகவே ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும் என்பதாகும். என்னதான் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தினாலும் அவ்வப்போது இந்தியாவிடம் அவர்கள் வாலாட்டுவதுமுண்டு. வாங்கிக் கட்டிக்கொள்வதுமுண்டு. “நரி செத்தாலும் அதன் பார்வை கோழியின் மீதுதான் இருக்கும்” என்பார்களே அதுபோல பாகிஸ்தானின் பார்வை இந்தியாவை அழிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க முயற்சிக்கும்போது, அந்த எண்ணமே அவர்களுக்கு அழிவைக் கொண்டு வரும். இது அழிவின் ஆரம்பமாகும். ஒரு சமயம் வரும்போது பாகிஸ்தான் என்ற முழு சமுதாயமும் முற்றிலுமாக அழிக்கப்படும். சிந்துமாகாணம் என்று அழைக்கப்படுகிற பாகிஸ்தான் மறுபடியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ‘இந்தியாவைப் பாதுகாக்கிற உமக்கே வெற்றி!’ என்ற தாகூரின் தேசிய கீதத்தை இது நிரூபிக்கும்.

பாகிஸ்தான் இந்தியாவிற்கு கேடு உண்டாக்க முயற்சிக்கிறது. ஸ்ரீமந் நாராயணர் நம்முடைய நாட்டை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பதற்கு இந்த திடீர் பூகம்பம் ஒரு அடையாளமாக இருக்கிறது.  கிஸ்தான் துருப்புகள் இந்திய எல்லைப் பகுதியில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், 2005-ம் வருடம் நடந்தது போல், இந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியும் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, விஷவாயுவை வெளியேற்றும் தீவும் வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் முடிவைப்பற்றி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணா முன்னுரைத்த செய்தியிலிருந்து தொகுக்கப்பட்டவை் இப்பொழுது நான் பாகிஸ்தானைப் பற்றியும் கூறுகிறேன். பாகிஸ்தான் அல்லது சீனா இந்தியாவிற்கு விரோதமாக வந்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். பிரதமர் பூட்டோ பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது “இந்தியர்கள் எலிகள்”என்று கூறினார்.  இறுதியில் அவர்தான் எலியைப் போல சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பொழுது பாகிஸ்தான், இந்தியாவை கைப்பற்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இறைவன் இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தியாவிற்கு விரோதமாக கூறப்படும் காரியங்களை நான் செய்தித்தாளின் மூலமாகவும், வானொலிமூலமாகவும் அறிந்துகொண்டேன். இப்பொழுது பாகிஸ்தான் இந்தியாவைக் கைப்பற்றி, எல்லாவற்றையும் ஒரே நாடாக செய்யப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கோ நாராயணர் இந்தியாவில் இருக்கிறார் என்பது தெரியாது.

இப்பொழுது இந்த சிறிய தேசமாகிய நீ இந்தியாவிற்கு விரோதமாக மாத்திரமல்ல, எனக்கு விரோதமாகவும் உன் வார்த்தைகளைக் கூறினாய். எல்லாரும் தர்ம யுகத்தில் களிகூறுவார்கள். ஆனால் இவன் இருக்க மாட்டான். எனவே பாகிஸ்தானுக்கு அழிவு வேண்டுமா? என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டு விட்டது. ஏன்? பழிவாங்குகிற இறைவன். முதலில் அவர்களை அழிக்கிறார், பாகிஸ்தான் முழுவதும் நம்முடைய கையின்கீழ்வரும். எல்லா தொந்தரவுகளும் அவர்களால் வருகிறது. ஏனென்றால் இந்தியா கைப்பற்றப்பட்டுவிட்டால், முழு உலகமும் கைப்பற்றப்பட்டதாகிவிடும். ஏனென்றால் இந்தியா

தோற்கடிக்கப்பட்டால் காக்கும் கடவுள் அங்கே இல்லை என்று அர்த்தமாகும். இந்தியா எந்த ஆயுதங்களாலோ அல்லது சேனையாலோ ஜெயிக்காமல் இறைவனுடைய வல்லமையினால் ஜெயிக்கும். ராம ராஜ்யத்தில் உலகமே சுபீட்சமாக இருக்கும்போது, பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது. யு.என்.ஓ. (U.N.O.) என்ற இயக்கமே பாகிஸ்தானை இந்தியாவிற்கு

கொடுத்து விடும். ஆகவே தர்ம யுகத்தில் முழு உலகமும் சந்தோஷமாக இருக்கும்போது பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது. எனவே அந்த நாட்டை இழப்பதற்கு – அது முந்தைய நாட்களைப்போல இருக்குமென்றால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர தேசங்கள் ஒன்றாக சேர்ந்து அந்த தேசத்தைத் திரும்ப கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது அது நடக்காது. நமக்கு கிடைத்த தேசத்தை நாம் விட்டு விட மாட்டோம். ஏனென்றால் தர்ம யுகத்தில் முழு உலகமும் ஒரே இறைவனின் மக்களாகிய நமக்குக்கீழ் வரவேண்டும். பாகிஸ்தானிய தேசம் இந்தியாவுடன் சுமூகமாகச் செல்லாவிட்டால்

அதற்கு அழிவு நிச்சயம் ஏற்படும் என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. மேலும் நம் இந்திய நாட்டை எந்த நாட்டினரும் அழிக்க முடியாது. ஏனென்றால் இறைவன் வருகை தந்த இந்த தெச்சணத்தில் இருந்து ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறிய இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறும் சமயம் இதுதான்.

“இந்திய வரலாற்றை படித்தால் இந்துக்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என நினைத்துக்கொண்டு, இந்தியாவைத் தாக்குவதற்கு எத்தனை மக்கள் வந்தார்கள்™ அலெக்சாண்டர் வந்தார். முஸ்லீம்கள் வந்தனர், நெப்போலியன் வந்தார். நான் அதைப் படித்தபோது ‘ஓ! இந்தவிதமாக இந்தியாவைத் தாக்குவதற்கு ஏன் விரும்பினார்கள்ட?’என்று நான் எண்ணிக்கொண்டேன். ஏனென்றால் விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள யாக்கோபின் உண்மையான கோத்திரங்களெல்லாம் இந்தியாவை மறைவிடமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இங்குதான் உள்ளார்கள். அஹிம்சையைக் கடைப்பிடித்த மகத்தான மக்கள் இந்தியாவில்தான் எழுப்பப்பட்டிருக்கிறார்கள். புத்தர், காந்தி, இயேசு முதலியோர் அஹிம்சையைக் கடைப்பிடித்த மக்களாக இருந்தார்கள் அவர்கள் அஹிம்சையைப் பிரசங்கித்தார்கள். அஹிம்சை இந்த நாட்களில் ஜெயிக்குமா? எவனாவது, கத்தி அல்லது துப்பாக்கியை எடுத்துக்கொள்வானென்றால், அவன் ஒரு பெரிய ஆள் ஆகி விடுகிறான்.

இந்தியாவைக் குறித்தும், உங்களைக் குறித்தும் இருக்கிற விசேஷித்த காரியம் என்னட? மகத்தான காரியம் ஏதோ ஒன்று இருக்கிறது. மிகவும் திரளான சாதுக்கள் இங்கு இருக்கிறதால், இது புண்ணிய பூமி என்று அழைக்கப்படுகிறதாட? மோசமான மக்கள் கூட இங்கு இருக்கிறார்கள். அவதாரங்கள் இங்கே வந்ததாலும், நாராயணர் இந்தியாவின் மீது அக்கறை காட்டுகிறதாலும்தான் இது புண்ணிய பூமி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் வருங்காலத்தில் ஆசீர்வாதங்கள் இங்கிருந்துதான் அகில உலகத்திற்கும் செல்லவேண்டும்.

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்!

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்! ஆம்!! இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க!

 – மகாகவி பாரதியார்

Filed under: ஆன்மீக கருத்து, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்