தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள், ஸ்ரீமத் பகவத்கீதை » ஆழ்நிலை தியானம் அல்லது அழிவற்ற யோகம் என்றால் என்ன?

ஆழ்நிலை தியானம் அல்லது அழிவற்ற யோகம் என்றால் என்ன?

ஆறாம் உபதேசம்

Transcendal Meditation

 

எவன் என்னை எல்லா உயிர்களிடத்திலும் பார்க்கிறானோ, என்னுள் எல்லாம் உயிர்வாழ்வதைப் பார்க்கிறானோ அவனுக்கு நான் காணாமற்போவதில்லை, அவனும் எனக்குக் காணாமற்போவதில்லை. ஒரு பக்தன் என்னுடனே ஐக்கியப்பட்டு என்னில் நிலைத்திருந்து, அனைத்து உயிர்களிலும் வாழும் என்னையே வணங்கினால், இந்த உலகத்திலே அவன் என்ன செய்தாலும் எத்தொழில் செய்தாலும் என்னுடனே வாழ்கிறான். பரமபுருஷரை கிரஹித்து உணர்ந்த ஒருவன் சுகமாயினும், துக்கமாயினும் எங்கும் தன்னையே உபமானமாகக் கொண்டு சமமாகப் பார்க்கின்றானோ, அத்தகைய என்னுடைய பக்தன்தான் சிறந்தவன் அல்லது உண்மையான மணவாட்டி ஆவான்.

அதுமட்டுமின்றி இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு சிருஷ;டியும் கடவுளை உணர்ந்த ஆத்மாவிற்கு, தேவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. அர்ச்சுனன் கிருஷ்ணரை நோக்கி் ஆண்டவனே! நீ கற்பித்த ஆழ்நிலை தியான முறையின்படி என்னுடைய சஞ்சலமுள்ள மனதால் சமாதானத்தை அடையமுடியவில்லை. ஏனென்றால் இந்த ஐம்புலன்களின் மனதானது அல்லது என்னுடைய கண்டுவிசுவாசிக்கிற தன்மையானது அடங்காததாயும், பிடிவாத முள்ளதாயும், வலிமையுடையதுமாய் உள்ளது. ஆகவே காற்றைப்போல அசைந்தாடிக் கொண்டிருக்கும் என்னுடைய மனித சிந்தையைக் கட்டுப்படுத்துவது எனக்குக் கடினமாயிருக்கிறது என்று கூறினான். அதற்கு கிருஷ்ணர் கூறியதாவது் ஐம்புலன்களால் கண்டு விசுவாசிக்கிற மனம் அடக்குதற்காpயதுதான், நிலையற்றதுதான், இதில் சந்தேகமில்லை. ஆனால் ஆழ்நிலை தியானம் (வைராக்யேன) அல்லது அழிவற்ற

யோகத்தினால் அடைந்த சத்தியத்தின் மூலமாக முழு விசுவாசத்துடன் சந்நியாச யோகத்தை மறுபடியும் மறுபடியுமாக பயிற்சி செய்வதின்லமும், கர்மயோகத்தைப் பின்பற்றுவதினாலும் மனதை அடக்கமுடியும்.

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள், ஸ்ரீமத் பகவத்கீதை