தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம் » ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து

முந்தி யிருப்பச் செயல்” – என்ற குறளில்

வள்ளுவர்  ஒருவன்  தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் இருக்கும் அவையின்  தலைமகனாக  தன் மகன்  இருக்குமாறு உருவாக்க  வேண்டும்  என்கிறார். கல்வியை  மட்டும்  கற்றால் போதாது, வாழ்க்கைக் கல்வி  அதாவது  எவ்வாறு வாழ வேண்டும்  என்ற கல்வியையும் கற்க வேண்டும் என்று  சென்ற  இதழில்  பார்த்தோம். இக்காலத்தில்  பெற்றோர் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட  சூழ்நிலையிலும்  வாழும் கலையை கற்றுக்கொடுக்காமல்  பணத்தை  அவர்களுக்காக சேர்த்து  வைக்கிறார்கள். நான் கஷ்டப்பட்டது போல என்  பிள்ளைகளும்  கஷ்டப்படக்கூடாது என்ற மனநிலை உடையவர்களாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது. பிள்ளைகள் கஷ்டப்படும்போது வாழ கற்றுக்கொள்ளுவார்கள் என்ற மனநிலைபெற்றோர்களிடம் இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்.
ஸ்ரீமந் நாராயணர்  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாஅமைத்த மனுஜோதி  ஆசிரமத்தில் “வாழ்க்கைகல்வி” முறை  இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.  பள்ளிக் கூடம்  மற்றும்  கல்லூரி  செல்பவர்களுக்காக  கோடை காலத்தில், இந்த பயிற்சியை  மேற்கொள்ள  வாய்ப்பளிக்க  “கோடை கால விடுமுறை முகாம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கல்வியறிவு, வாழ்க்கை கல்வி இவற்றை மட்டுமே பிள்ளைகளுக்கு  அளித்தால் போதுமா? ஒருவன் சாகாத கல்வியை கற்றுணர வேண்டாமா?வள்ளுவரே  தம்  குறளில்  இதைக் கூறுகிறார்.

“கற்றதனால் ஆய  பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின்”

கல்வியில் சிறந்தது சாகாத கல்வியாகும் என்று வள்ளலார் தம்முடைய உபதேசத்தில் கூறுகிறார். திருக்குறளில் முதல் அதிகாரத்திலேயே  சாகாத கல்வியைப் பற்றி வள்ளுவர் சொல்லியிருக்கிறார். வேதங்களில் சாகாத கல்வி சொல்லப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கான வழியைப் பற்றி திருவள்ளுவர் கூறுகிறார். பிறவிப் பெருங்கடலை நீந்தி எவ்வாறு  இறைவனடி சேருவது? என்ற அறிவே சாகாத கல்வியாகும். மருத்துவக் கலையைப்  பயின்றவர்  மருத்துவர்  என்கிறோம்.  மர வேலைப்பாடுகள்  செய்ய  கற்றவனை  தச்சன் என்கிறோம்.  பொன் ஆபரணங்களை  செய்ய படித்தவனை  பொற்கொல்லன் என்கிறோம். சாகாத கல்வி பயின்ற மருத்துவர் இறைவன் ஆவர். இறைவனே இப்பூமிக்கு அவதாரமாக வந்து எவ்வாறு மரணத்தை வெல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார். ஆகவேதான் விவிலியத்தில் “நானே உன் பரிகாரியாகிய இறைவன்” என்று விளம்புகிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் அறிவை மனிதனுக்கு வழங்கினார். இறைவன். மரணம் என்ற  பிணியைப் போக்கும் சாகாத கல்வியை  இறைவன் தாமே கற்றுக்கொடுக்கிறார். மரணத்தை வெல்வதற்கான வழிகளை ஆராய்ச்சி செய்யவே, மனுஜோதி ஆசிரமத்தை  நிறுவினார், கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. வள்ளலார்  இதை மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் வழி என்று தம்முடைய உபதேசத்தில் கூறுகிறார். மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்குச் சில பக்குவங்களை வள்ளற் பெருமான் கூறுகிறார்.

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு ஆகும். அவையாவன் ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம்.  இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்கு அளவையும் கூறுகிறார்.  உணவு அரை (½)  உறக்கம் (1/8)  மைதுனம் (1/16) பயம் பூஜ்ஜியமாக (0) இருக்க வேண்டும் என்கிறார்.  மனிதன் சாதாரணமாக 1000 ஆண்டுகள் வாழ்வதற்காக  சிருஷ்டிக்கப்பட்டான் என்று விவிலியத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.  1000 ஆண்டுகள் வாழ வேண்டிய மனிதன் தற்போது கலியுகத்தில்  30 அல்லது  40 வயதில் மரணமடைகிறான். ஆயுள் குறைந்து போவதற்கான காரணங்களை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா வேதங்களை ஆராய்ந்து கூறியுள்ளார். அடுத்தபடியாக  ‘சாகாத கல்வி’ அல்லது  ‘மரணமில்லா பெருவாழ்வு’ அல்லது  ‘ஜீவன் முக்தி’ அல்லது  ‘நித்திய ஜீவன்’ எவ்வாறு பெற வேண்டும் என்று விளம்பியுள்ளார்.   அவற்றைக் குறித்து காண்போம்.

மனிதன் இறைவனோடு உறவாடுவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் மனிதன் இறந்து போக  நேரிட்டது.  ஜீவன் அவனை விட்டுச் சென்று விட்டதினால், எல்லோரும் எல்லா இடத்திலேயும்  “ஜீவனை” எவ்வாறு பெற வேண்டும் என்ற ஆராய்ச்சியை  நடத்துகிறார்கள். ஜீவன் எங்கேயிருந்து ஆரம்பித்தது? அது எவ்வாறு ஆரம்பித்தது? என்பதைப் பற்றி  விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். வைட்டமின் – ஈ (Vitamin – E) சேர்த்துக்கொண்டால் மனிதன் நீண்ட காலம் வாழலாம் என்கிறார்கள்.

‘காயகல்பம்’ என்பதை உணவில் சேர்த்துக் கொண்டால், நீண்ட காலம் வாழலாம் என்று மூலிகை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மனுஜோதி ஆசிரமம், நித்தியஜீவன் அல்லது சாகாத வரம் அல்லது ஜீவன் முக்தியை எவ்வாறு பெற வேண்டும் என்று ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சி நிலையமாக உள்ளது. மனிதன் எக்காரணங்களினால் இறக்க  நேரிட்டான் என்பதைக் கண்டுபிடித்து விட்டால், நீண்ட காலம் வாழலாம். மனிதன் 50 முதல் 80 வயது வரைதான் வாழ்கின்றான். அதற்குள்ளாக அவன் யாரையாவது சுட்டுக் கொன்று சர்வாதிகாரியாக விரும்புகிறான்.  இறந்த பின்னர் அவனுக்கு ஒரு சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. ஓ! அவன் பூதவுடலை நீக்கி புகழுடம்பை எய்தினான் என்று கூறுகிறார்கள். ஒருவன் கற்சிலையாக வாழ்வது,ஜீவன் முக்தி அல்லது சாகாத வரம் பெறுவதாக அர்த்தமாகுமா? அப்படியென்றால் நாம் மிகவும் பரிதபிக்கப்படுகின்ற மக்களாக இருக்கிறோம்.

சாகாத வரம் அல்லது சாகாத கல்வி அல்லதுஜீவன் முக்தி, இப்பொழுது எளிமையில் வந்துள்ளதால், ஒரு ஏழை மனிதன்கூட விலை செலுத்தாமல் அதைப் பெற்றுக்கொள்ளலாம். சாகாத கல்வியை கற்றுக்கொள்ள அல்லது ஜீவன் முக்தியை பெற்றுக்கொள்ள வயது வரம்பு கிடையாது. ஜீவன் முக்தி என்பது இறைவனின் கையில் இருக்கிறது. ஆகவே ஜீவனை நாம் எவ்வாறு இழந்து போனோம்? மனிதன் தன்னுடைய சொந்த மூளையை உபயோகித்து எவ்வாறு ஜீவன் முக்தியை பெற முடியும்? அது சாத்தியமல்ல. இறைவனே அதை நமக்கு ஆசானாக வந்து கற்றுத்தர வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் வரப் போகின்ற கல்கி மகா அவதாரத்தை “மகத்தான ஆசான்” என்று கூறுகிறார். இழந்துபோன ஜீவனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்? விஞ்ஞானிகளா? காயகல்பம் செய்யும் மூலிகை வைத்தியர்களா? இறைவனை பின்பற்றுபவர்களா? அல்லது ஜீவனை தன் கையில் வைத்திருக்கும் இறைவனின் அவதாரமான கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவா? என்பதுதான் கேள்வியாகும்.

மனிதன் சுயமாக சிந்திக்கவும், சுயமாக செயல்படக்கூடியவனாக சிருஷ்டிக்கப்பட்டான். ‘சுயசித்தம்’ என்பது மிகவும் ஆபத்தானது. மனிதன் இறைவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டபோதும், அவன் சுயசித்தமுள்ளவனாக அதாவது தான் விரும்பியதை செய்யக்கூடியவனாக இருக்கிறான். “சுயசித்தம்” என்பதை மனிதன் விட்டு விட்டு இறைவனின் சித்தத்தை செய்வதே ஞானமாக கருதப்படுகிறது. இந்த ஞானத்தின் மூலமாக நாம் இழந்துபோனஜீவனைப் பெறுகிறோம். மறுபடியுமாக இறைவனே நம்மை ஆட்சி செய்ய வேண்டுமென்று நாம் விரும்ப வேண்டும். அத்துடன் அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் வர விரும்ப வேண்டும். இறைவா என்னை ஆட்கொள், நீ என்னை ஆள வேண்டும், நான் உம்முடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்க விரும்புகிறேன், என்று நாம் கூறி நம்முடைய விருப்பங்களையெல்லாம் விட்டு விட்டு, நம்முடைய வாழ்க்கையை இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும்.

மிருகங்கள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றிற்கு சுயசித்தம் கிடையாது. மனிதனிடம்: நீ அவற்றை பராமரித்துக் கொள் என்றார். ஏன்? அவைகளிடமிருந்து மனிதன் இறைவனுடைய கட்டளைகளை அறிந்துகொள்ளலாம். இறைவன் யானையிடம்:  “நீ இலை, தழைகளை உட்கொண்டு உயிர் வாழ்” என்றார். குதிரைக்கும் அதே கட்டளைதான் கொடுக்கப்பட்டது. தினமும் அவைகள் புல்லைத்தான் சாப்பிடுகின்றன. எனக்கு புல் தின்று சலிப்பாக இருக்கிறது என்கின்றனவா?

ஆனால் மனிதனோ ஒருநாள் ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்கிறான். இன்னொரு நாள் ஐஸ்க்ரிம் வேண்டும், ஒருநாள் பால்கோவா என்று விதவிதமான ருசிகளை ருசிக்க வேண்டும் என்கிறான். ஒரேவிதமான ஆகாரத்தை சாப்பிட்டால் எனக்கு சலிப்பாக இருக்கிறது என்கிறான்.

ஆயுட்காலம் குறைய ஆரம்பித்தபோது, ஜீவன் எங்கேயிருக்கிறது என்று மனிதன் கண்டுபிடிக்க முயற்சி செய்தான். தான் சாப்பிடும் உணவினால் ஆயுட்காலம் குறைந்துபோனது என்று நினைத்தான். முன்பு தேவர்களின் உணவை மனிதன் சாப்பிட்டான். அதன்பின்னர் மிருகங்களைப்போல மூலிகைகளை உண்ண ஆரம்பித்தான். ஆனால் இறைவனின் பாகமாக உள்ளவர்கள் ஜோதி ரூபமானவர்கள். அவர்கள் மிருகங்கள் அல்ல. ஆனால் மிருகங்களைப் போல ஆனார்கள். அதன்பின்னர் பழங்களை உண்ண ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் விதை தானியங்களை சாப்பிட்டார்கள். நல்ல வழிக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டார்கள். ஆகவே அவர்கள் ஆயுட்காலம் 120 வயது என்றானது. 1000 வயதிலிருந்து 120 என்ற வயதிற்கு வரம்பு விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 80 வயது வரை வாழ்ந்தார்கள். தற்போது 40, 50, 60 வயதுவரை வாழ்வதும் மிகவும் சிரமமாக உள்ளது.  ஏனென்றால் இப்பொழுது மனிதன் புலால் உண்ணும் நிலைக்கு வந்து விட்டதால் ஜீவனை இழந்துவிட்டான். நாவின் ருசிக்கு அடிமையாகி, மிருகங்களின் மாம்சத்தை உண்ண ஆரம்பித்தான். இது ஜீவனுக்குச் செல்லும் வழியல்ல. புலால் உண்ணாமல் இருப்பதைப் பற்றி வள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தியுள்ளார்கள். ஜீவன் முக்தியைப் பெற விரும்புபவர்கள் புலால் உணவை உண்ணாமல் இருக்க வேண்டும். அடுத்ததாக ஜீவன் மனிதனை எங்ஙனம் விட்டுச் சென்றது? இறைவனைத் தவிர எந்த சிருஷ்டியையும் வணங்கவும் கூடாது, நேசிக்கவும் கூடாது. இறைவனை நாம் நம் முழு மனதுடனும், முழு ஆன்மாவுடனும், முழு இருதயத்துடனும், முழு சக்தியுடனும் நேசிக்க வேண்டும். அப்படி செய்யும்போது நாம் வேறு யாரையும் வணங்கவும் முடியாது, நேசிக்கவும் முடியாது. இறைவனைத் தவிர வேறு சிருஷ்டிகளை வணங்குபவர்களுக்கு சாகாத ஜீவன் கிடைக்காது. இறைவனின் தத்துவங்களை வர்ணிக்கும் சிருஷ்டிகளாகிய, உதாரணத்திற்கு விநாயகர், பிரம்மா போன்ற சிருஷ்டிகளை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இங்கே குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவை இறைவனின் தெய்வீக குணங்களை விளக்குபவையாக உள்ளன. பொருளாசை உள்ளவர்கள், கொலை பாதகர்கள் சாகா ஜீவனைப் பெற முடியாது. கொலை பாதகர்கள் என்பதற்கு விளக்கமாவது் எவன் ஒருவன் இன்னொருவனை துவேஷிக்கின்றானோ, பகைக்கிறானோ அவனே கொலைபாதகன். பகை உணர்ச்சியுடையவர்கள் சாகா ஜீவனைப் பெற முடியாது.

Filed under: திருக்குறள் விளக்கம்