தமிழ் | తెలుగు

» கவிதைகள் » ஆன்மீக கவிதைகள்

ஆன்மீக கவிதைகள்

மனம் பழுத்த மனிதன்தான் மகாத்மா ஆவான்;

மதி பழுத்த கனவினிலே உண்மை துலங்கும்!

இனம் பழுத்த நாட்டில்தான் எழுச்சி பொங்கும்;

இமயமது பழுத்தால்தான் கங்கை பொங்கும்!

தினம் பழுக்கும் நிலாக்கனிபோல் நாட்கள் தோன்றும்;

செவ்வானில் பழுத்து வரும் கதிரவன்போல தனம் பழுத்த மாதவனே தனயனாவான்!

தமிழ் பழுத்த குலத்தார் கூடி லஹரியின் புகழ் பாடுகின்றார்!

கோடிதனில் ஒன்றுதான் தலைமை தாங்கும்;

கோபுரத்தில் கலசம்தான் தலைமை தாங்கும்!

பாடலிலே மோனைகள்தான் தலைமை தாங்கும்;

பாவையரில் கண்ணகிதான் தலைமை கண்டோம்!

ஆடி வெள்ளம் பெருக்கெடுக்கும் தாமிரபரணிபோல்,

ஆறுகளுக்கே தலைமை தாங்கி ஆட்சி செய்யும் லஹரிகிருஷ்ணா!

சத்திய நகரெங்கும் கூடியுள்ள நாமெல்லாம்,

ஒருவனே தேவன் என்ற உண்மையினை உலகிற்கே உரைத்திட்டார்!

அவரே லஹரி! லஹரி!! லஹரி!!! என்றுமே போற்றிடுவோம்!

                                   – அம்பை  பாலசரஸ்வதி

Filed under: கவிதைகள்