தமிழ் | తెలుగు

» கவிதைகள் » அவர் நாமம் சொல்லுவோம்!

அவர் நாமம் சொல்லுவோம்!

உலகில் நட்புறவு இதனால் மலரும்!
உன்னத செயல்கள் புரிந்திட விளையும்!
சமத்துவ நேயமே நாலும் வளரும்!
சங்கதி பலவும் ஸ்ரீ லஹரி உரைக்கும்!
தொண்டுகள் புரிய உள்ளம் நினைக்கும்!
தொய்விலாப் பணிகள் செய்திட சொல்லும்!
துயரம் யாவையும் கரைந்திட மறையும்!
ஸ்ரீ லஹரி என்றாலே காரிருள் போகும்!

நன்மைகள் யாவும் வந்தே அமரும்!
நானிலம் மகிழ்ந்து வணக்கம் செய்யும்!
ஸ்ரீ லஹரியை மனதினில் நினைத்தால் போதும்!
ஸ்ரீ ரங்கனின் அருள்தான் வந்தே சேரும்!
அன்பது உதிக்கும் பண்பது செழிக்கும்!
அயர்விலாப் பணிகள் ஆற்றிடச் செய்யும்!
ஸ்ரீ லஹரி நாமத்தை தினமும் சொன்னால்
ஸ்ரீ கவி போலே கவிதைகள் படைப்போம்!

– கவிஞர் எஸ். இரகுநாதன், சென்னை
– ஜெ. வேல்மணி, சேலம்

Filed under: கவிதைகள்