தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » அல்லாஹ் நேரான பாதையில் வழிநடத்துகிறார்

அல்லாஹ் நேரான பாதையில் வழிநடத்துகிறார்

சங்கைமிக்க குர்ஆன்

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா-21

வச.60-63: அதற்கவர்களில் சிலர் “ஒரு இளைஞர் இவைகளைப் பற்றி குறை கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் செவியுற்றிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் கூறப்படுகிறது”என்று கூறினார்கள்.

அதற்கவர்கள், “அவ்வாறாயின், அவரை மக்களின் கண்களுக்கெதிரில் கொண்டு வாருங்கள்; அவரை யாவரும் பார்த்து அவர்கள் சாட்சியம் கூறலாம்”என்று கூறினார்கள்.

அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவரிடம், “இப்றாஹீமே! எங்களுடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானா?”என்று கேட்டனர்.

அதற்கவர், “அவ்வாறல்ல! அதை அவர்களில் பெரியதுதான் செய்தது; உடைக்கப்பட்ட அவர்கள், பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்!”என்று கூறினார்.

வச.64-65: அவர்கள் நாணமுற்று தங்கள் பக்கமே திரும்பி ஒருவர் மற்றவரிடம், “நிச்சயமாக நீங்கள்தான் இவற்றை வணங்கி அக்கிரமம் செய்து விட்டீர்கள் என்று கூறிக்கொண்டார்கள்.

பின்னர், வெட்கத்தால் அவர்கள் தலை குனியச் செய்யப்பட்டார்கள்; சற்று நேரத்திற்குப் பிறகு இப்றாஹீமிடம், “இவைகள் பேசமாட்டா என்பதை நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்”என்று கூறினார்கள்.

✡✡✡✡✡✡✡

 

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்