தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா – 21

வச. 51: நிச்சயமாக, இப்றாஹீமுக்கு முன்னரே சிறு பிராயத்திலிருந்தே அவருடைய நல்வழியை நாம் கொடுத்திருந்தோம்; அவரைப்பற்றி நாம் நன்கறிந்தோராகவும் இருந்தோம். அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “இச்சிலைகளென்ன? அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக வழிபடுவதில் நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக இருந்ததை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

வச. 54-59: அதற்கவர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அதற்கவர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மையான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா?” என்று கேட்டனர். அதற்கவர், அவ்வாறு அல்ல! “உங்களுடைய இரட்சகன் அவன்தான் வானங்களுக்கும், பூமிக்கும்  இரட்சகனாவான்; அவனே அவற்றைப் படைத்தான்; இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று இப்றாஹீம் கூறினார். “இன்னும், அல்லாஹ்மீது சத்தியமாக! நீங்கள் இங்கிருந்து புறங்காட்டியவர்களாகத் திரும்பிச் சென்றபின், உங்கள் சிலைகளுக்குத் திண்ணமாக நான் சதி செய்வேன்” என்றும் கூறினார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அவற்றில் பெரியதைத் தவிர மற்ற யாவற்றையும் துண்டு துண்டாக ஆக்கி உடைத்துத் தள்ளிவிட்டார்; பெரிய சிலையாகிய அதன்பால் விளக்கம் கேட்டு அவர்கள் திரும்புவதற்காக அதனை மட்டும் உடைக்கவில்லை. திரும்ப வந்து, இவற்றைக் கண்ட அவர்கள், “எங்கள் வணக்கத்திற்குரிய தெய்வங்களை இவ்வாறு செய்தவன் யார்? நிச்சயமாக, அவன் அநியாயக்காரர்களில் உள்ளவன்” என்று கூறினார்கள்.

✡✡✡✡✡✡✡

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்