தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » அல்லாஹ்வின் வழிநடத்தல்

அல்லாஹ்வின் வழிநடத்தல்

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும்  நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா-6

வச.74-82: மேலும், இதைப்பற்றி அவருடன், அவருடைய சமூகத்தார்கள் விவாதித்தார்கள்; அதற்கவர் அவர்களிடம் கூறினார்: “நீங்கள், படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் வாதம் செய்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழியைக் காட்டிவிட்டான்; என் இரட்சகன் யாதொன்றை நாடினாலன்றி, நீங்கள் எதை அவனுக்கு இணை வைக்கின்றீர்களோ அதை நான் பயப்படவுமாட்டேன்; என் இரட்சகன் ஒவ்வொன்றையும் தன் அறிவால் சூழ்ந்தறிகிறான்; ஆகவே நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அசத்தியமானவை என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?”

மேலும் “உங்களுக்கு யாதோர் அத்தாட்சியும் அவன் இறக்கி வைக்காமலிருந்தும் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதவர்களாக இருக்க, நீங்கள் இணை வைத்தவைகளுக்கு நான் எவ்வாறு பயப்படுவேன்? நம் இரு பிரிவினரில் அச்சமற்றிருக்க மிகத் தகுதியுடையோர் யார் என்பதை நீங்கள் அறிந்தவர்களாயிருந்தால்” கூறுங்கள் என்றும் கூறினார்.

விசுவாசங்கொண்டு, பின்னர் தங்களுடைய ஈமானை இணை வைத்தல் எனும் அநீதத்தைக் கொண்டு கலந்து விடவில்லையே அத்தகையோர் – அவர்களுக்கே அபயமுண்டு; அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.

வச.83: இன்னும் மேற்கூறப்பட்ட அவை, நம்முடைய அத்தாட்சிகளாகும்; இப்றாஹீம் தன் சமூகத்தாருக்கு எதிராக வெற்றி கொள்வதற்காக, நாம் அவைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தோம்; நாம் நாடுவோரின் பதவிகளை நாம் உயர்த்துவோம்; நபியே! நிச்சயமாக உம்முடைய இரட்சகன் மிக தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிகிறவன்.

வச.84: இன்னும், நாம் இப்றாஹீமாகிய அவருக்கு இஸ்ஹாக்கையும், அவருடைய குமாரர் யஃகூபையும் வெகுமதியாக வழங்கினோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததியிலிருந்து தாவூதையும், ஸூலைமானையும், அய்யூபையும், யூஸூபையும் மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம்; நன்மை செய்வோருக்கு, இவ்வாறே நாம் நற்கூலி வழங்குகின்றோம்.

வச.85: ஜகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் நேரான வழியில் செலுத்தினோம். இவர்களில் ஒவ்வொருவரும் நல்லவர்களில் உள்ளவராவர்.

வச.86: இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் நேர்வழியில் செலுத்தி இவர்கள் ஒவ்வொருவரையும் அகிலத்தாரை விட மேன்மையாக்கியும் வைத்தோம்.

✡✡✡✡✡✡✡

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்