தமிழ் | తెలుగు

» கவிதைகள் » அன்புக் கொடி

அன்புக் கொடி

இறைவன் ஒருவன் தானென்றே எடுத்துக் கூறும் கொடியிதே

இறையின் தியாகக் குணத்தையே குறிக்குங்காவிக் கொடியிதே

அன்புயென்னும் தெய்வீகத்தை அடையும் வழியும் காட்டுதே

ஆதிபலி பிரம்மவேள்வியை காட்டுங்குறியீடேற்ற கொடியிதே

இல்லந்தோறும் ஏற்றுவோம் எல்லாவூரிலும் ஏற்றுவோம்

இல்லாத ஏழையர்க்கும் எளியோர்களுக்கெல்லாமே

உதவியேது மாற்றுவோம் அன்னதானங்கள் வழங்கியே

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை கூறுவோம்

தாம் தர்மத்தை நிலைநாட்டிடும் தன்னிகரில்லாக் கொடியிதே

மர்மமாக உலகை மூடிய அறியாமையிருள் நீக்குங் கொடியிதே

ஆன்மீக மகிலத்தில் பரவிட அன்பே தெய்வீக மென்றுணர்த்திட

ஆனந்தமாய் காவிக்கொடியேற்றி மனுஜோதி தீபமேற்றுவோம்

கொடியை ஏற்றுவோம் நமது கொடியை ஏற்றுவோம்!

– நல்லாசிரியர் கவிஞர். பி. வேலுசாமி, சேலம்

✡✡✡✡✡✡✡

 

Filed under: கவிதைகள்