தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » அன்னம்

அன்னம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்என்ற கூற்றை அனைவரும் அறிந்திருக்கிறோம். உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். நாம் பிறருக்கு வழங்கும் உணவு அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதச் செயல் அன்னதானமாகும். ஆனால் அன்னம் என்பதின் உண்மையான பொருள் என்ன என்ற கேள்விக்கு விடையைக் காண தைத்ரிய உபநித்திலிருந்து மேற்கோள் காண்பித்து விளக்கம் கூறியுள்ளார் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. தைத்ரிய உபநித் 2-ம் அத்தியாயம் அனுவிக்கா – I: ஸா வா ஈஷா புருஷா அன்னாரசா மயஹா”. அன்னம் என்பதின் சாராம்சத்தை உடையவர்தான் இந்த புருஷர். அப்படியென்றால் அன்னம்என்பதின் உண்மையான பொருள் என்ன? நாம் சாதாரணமாக உண்ணும் சாதம் அல்ல.

அன்னம் என்பது ஆத்யாத்தே+அத்தி என்பதின் சேர்க்கையாகும். ஆத்யாத்தே என்றால்: உண்ணப்படுவது, அத்தி என்றால் எது உண்ணுகிறதோ் சாதாரண அரிசி சாதத்தை நாம் உண்ணுகிறோம், ஆனால் அது நம்மை உண்ண முடியாது. ஆக அன்னம்என்பதின் உண்மையான பொருள் மறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பகவத்கீதை 3:14-ல் உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லா சிருஷ்டியும் அன்னத்தினால் உண்டானது, அதினால்தான் மழையும் பொழிகிறது. அப்படியென்றால் அன்னம்என்பதின் அர்த்தம் ஆதி வேள்வியாகும்.

ஆதி வேள்வியை நிகழ்த்திய பரமபுருஷர் நம்மை உண்ண வேண்டும். அப்படியென்றால் பரமபுருஷருக்குள் நாம் மீண்டும் இணைய வேண்டும், ஒன்றுபட வேண்டும் என்பதை தைத்ரிய உபநித் கூறுகிறது. அன்னத்தினால்தான் பூமியிலுள்ள எல்லா உயிர்களும் தோன்றின. அதன்பின்னர் அவர்கள் அன்னத்தினால் உயிர் வாழ்கிறார்கள். இறுதியில் அவர்கள் அன்னமாவதற்கு அதினுடன் இணைகிறார்கள். ஆக அன்னம்தான் எல்லா சிருஷ்டிகளுக்கும் முன்பாக சிருஷ்டிக்கப்பட்ட முதல் சிருஷ்டியாகும். அதுவே எல்லாவற்றிற்கும் சுகம் அளிக்கும் மருந்து. சகல சிருஷ்டியும் அன்னத்தினால் பிறக்கிறது. அதன்பின்னர் அன்னத்தினால் வளர்கிறார்கள். அன்னம் என்பது இறைவன் அல்லது சிருஷ்டி கர்த்தராகும். அன்னம் என்பது சிருஷ்டிகளினால் உண்ணப்படுகிறது. இறுதியில் அன்னம் அவர்களை உண்ணுகிறது. அன்னமே பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது”.

ஆதி புருஷர், பரமபுருஷர் என்பது அன்னம்என்ற பதத்தில் மறைந்துள்ளது. வேத அறிஞர்கள் அன்னம்என்ற பெயரை பரமபுருஷர் அல்லது ஆதிபுருஷருக்கு அளித்துள்ளனர். ஆதிவேள்வியை நிகழ்த்தியவர் ஆதிபுருர் ஆவார். தமிழில் அரிசி என்றால் அரியும் சிவனும் சேர்ந்ததின் சேர்க்கை அரி+சி. அரி+சிவன்  சிருஷ்டிப்பின் ஆதியில் இந்த வேள்வி நிகழ்த்தப்பட்டது என்று ஸ்ரீமத் பகவத்கீதை 3:10-12 கூறுகிறது. ஆக ஆதிவேள்வியானவரும் அவர்தான், ஆதிவேள்வியை நிகழ்த்தியவரும் அந்த பரமபுருஷர்தான் என்பது தெளிவாக இங்கே புலப்படுகிறது. பரமபுருஷர் பலிபுருஷனாக காட்சியளித்து ஆதிவேள்வி அல்லது ஆதி யக்ஞத்தை நிறைவேற்றினார். ஆதிவேள்வியினால் ஆசீர்வாதங்கள் உண்டாயின. இறுதியில் அதாவது கலியுகத்தில் அன்னம் அல்லது ஆதிவேள்வியை நிகழ்த்தியவரே தோன்றி நமக்கு புரியும்படி செய்துள்ளார். எனவே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதற்கு எவனொருவன் இறைவனின் ஆதிவேள்வியை பற்றியும், ஆதிவேள்வியை நிகழ்த்திய ஆதிபுருஷரைப்பற்றிய அறிவை மற்றவர்களுக்கு தானம் செய்கின்றானோ அதுவே சிறந்த தானமாகும். ஏனென்றால் இந்த அறிவினால் இறைவனின் பாகமானவர்கள் இறைவனிடம் ஒன்றுபடுகிறார்கள் அல்லது இணைகிறார்கள். ஆக அன்னதானம் செய்து சிறப்படைவோம்!

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கருத்து