தமிழ் | తెలుగు

» கவிதைகள் » அனைத்தும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

அனைத்தும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

அண்ட பிண்ட மெல்லா மனுவுக்கு அணுவாய் நீ

கொண்ட வடிவின் குறிப்பறியேன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க

மனக்கவலை தீர வரமருள்வாய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

ஐந்து பொறியையடக்கிய உன்னைப் போற்றாமல்

நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

தாயாகி தந்தையாய் சுற்றமெல்லாம் நீயாகி நின்ற

நிலையறியேன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

மந்திரமாய் சாத்திரமாய் மறை நான்காய்

தந்திரத்தை நானறிய தகுமோதான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

– கவிஞர். எஸ்.பி.கே. சாமி, தென்காசி

Filed under: கவிதைகள்