தமிழ் | తెలుగు

தலைப்புகள்

ஸ்ரீ குணவதி பாய்

மாதவசிங் என்பவர் ஓர் அக்னி குல ரஜபுத்ர வீரர், சிற்றரசராக இருந்தார். இவரது துணைவியே குணாபாய் என்றழைக்கப்படும் குணவதி பாய் இவ்விருவரும் சிறந்த தெய்வ பக்தியுள்ளவர்கள். குடிகளை கண்ணின் மணிபோல் காத்து வந்தனர். குணவதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இரு செவிலித்தாய்களை ஏற்பாடு செய்தனர். அந்த செவிலிகளுள் ஒருத்தி எப்பொழுதும் தெய்வ ஸ்மரணை செய்துகொண்டே இருப்பது கண்டு குணவதியின் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. நம்மிடம் வந்துள்ள ஒரு பணிமகள் தன் வேலைகளுக்கிடையே தெய்வ நாம ஸ்மரணை செய்து வருவது சாத்தியமானால், நம்போன்ற எல்லா வசதிகளும் உள்ளவர்கள் மேலும் சிறந்த முறையிலே பக்தி செய்ய முயல வேண்டாமா என்று நினைத்தாள். இதன்பின் நாளுக்கு நாள் குணவதியின் தெய்வ பக்தி வளரலாயிற்று. அரண்மனையிலே பாகவதர்களது வருகை அதிகமாயிற்று. இவளது இந்த மனமாறுதல் அரசன் மனத்துள் சந்தேகத்தை எழுப்பியது. புத்தி சுவாதீனமற்றுவிட்டதோ? என்றும் நினைத்தான். ஒருநாள் இவளை நோக்கி: நீ சிலநாட்களாய் சரியாய் ஆடை ஆபரணங்கள் அணியாமலும், உற்றார் உறவினரோடு கலகலவென்று பேசாமலும் இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு இவள்: ஸ்ரீதேவியை மார்பிலே தரித்த நீலமணி வண்ணனை நான் எப்பொழுதும் தியானம் செய்து வருகிறேன். என் மனம் அவருடைய திருவடிகளிலே லயித்திருப்பதால், மற்றவைகளில் எனக்கு … Read entire article »

சமீபத்திய கட்டுரைகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

அதிசய மழை மழை என்பதே ஆனந்தமும், ஆச்சரியமும் கலந்ததுதான். அதுவும் இந்தியாவில் நிகழ்ந்த சில மழைப் பொழிவுகள் மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. கேரளாவில் விசித்திரமான சிவப்பு மழை பொழிந்து இரத்த மாதிரியில் மண்ணை நனைத்தது. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் மீன் மழை பொழிந்தது. பாலைவன தூசிகள் சிவப்பு மழை பொழிவிக்கிறது. கடல் பரப்பிலிருந்து உருவாகும் புயல்கள் கடல் மீன்களை சுருட்டி கொணர்ந்து மீன் மழையை பொழியச்செய்கிறது. மழை இறைவனின் கருணையென்றால் இவ்விதமான விசித்திர மழைப் பொழிவுகள் அதிசயமே! ✡✡✡✡✡✡ … Read entire article »

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

பொய், கபடு, திருட்டு போன்றவை உங்கள் வாழ்க்கையில் இருக்கும்வரை உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது. சகோதரர்களை நேசித்து, அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழும்போது உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. – ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இரண்டு படகுகள் இருக்கின்றன. ஒன்று இயந்திர மோட்டார் பொருத்தியது. இன்னொன்று தண்டு வலிக்கும் படகு. சம்சார கடலை தாண்ட நாம் படகை உபயோகிக்க வேண்டும். மோட்டார் பொருத்திய படகு என்பதின் அர்த்தம் இறைவன் நம் வாழ்க்கையை திட்டமிடுவதாகும். தண்டு வலிக்கும் படகு என்பது நம் வாழ்க்கையை நாமே திட்டமிடுவதாகும். நாம் ஒரு சிறு பிள்ளையைக் கேட்டால்கூட இயந்திர மோட்டார் பொருத்திய படகில் செல்வது மேலானது, எளிதானது என்று கூறும். உங்கள் சொந்த முயற்சியை கை விட்டுவிட்டு இறைவனின் இஷ்டத்திற்கு சரணடையுங்கள். – ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ✡✡✡✡✡✡ … Read entire article »

ஆன்மீக சுற்றுப்பயணம்

இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் என்பது இறைவனால் முன்குறிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த பகுதிகளில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் வாக்கு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவருடைய திட்டமிடலின்படியே இந்த பயணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஒரு பொழுதுபோக்குக்காக செய்யும் உல்லாசப் பயணம் அல்ல. உதாரணமாக திரேதா யுகத்தில் விசுவாமித்திரர், தான் செய்யும் யாகத்திற்கு பாதுகாவல் அளிப்பதற்காக இராமன், இலட்சுமணன் இருவரையும் என்னுடன் அனுப்ப வேண்டும் என்று தசரத மகாராஜாவிடம் வேண்டினார். அந்த யாகத்தை பாதுகாக்க சென்ற பயணமானது பகவானின் திட்டப்படி ஜானகியை மணம் முடித்து அயோத்திக்கு திரும்பி வந்தார். இவ்விதமாகத்தான் ஆன்மீக சுற்றுப்பயணத்தின் போது நம்மை அறியாமலேயே அவருடைய லீலைகள் நிறைவேறும். உதாரணமாக இந்த வெகுதூரப் பிரயாணத்திற்குப் பிறகு வங்காள தேசத்திற்கு (Bangladesh) சென்றோம். அங்கு என்ன ஆச்சர்யம் என்றால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினரை எங்களால் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைக் குறித்து சிறிது நேரம் உரையாடினோம். உரையாடிய சமயத்தில்தான் அவர்கள் முப்பது ஆண்டுகளாக மனுஜோதி … Read entire article »

சத்தியத்தின் தந்தை

நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆன்மீக சிந்தை நாம் லஹரியின் ஆட்டு மந்தை இவர்தான் சத்தியத்தின் தந்தை நம் சுயநீதி எல்லாம் ஒரு கந்தை அய்யாவின் வல்லமையே மிகப்பெரிய விந்தை          – செந்தமிழ் ராஜா, சிதம்பரம் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

தெலுங்கு என பெயர் வர காரணம் என்ன?

முன்னொரு காலத்தில் தமிழ் கலாச்சாரமானது உலகெங்கும் பரவியிருந்தது. நம்முடைய இந்தியாவானது ஜாவா, டெஹ்ரான், போர்டியோ, சுமத்திரா அங்கிருந்து இந்தியா வரை ஒரே தேசமாக இருந்தது. அது அகண்ட பாரதம் என்று அழைக்கப்பட்டது. இந்திய சரித்திரத்தை ஆங்கிலேயர்கள் மறைத்து விட்டனர். இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை  ஒரே நிலப்பரப்பாக இருந்தது. உங்களால் இதை நம்ப முடிகிறதா? எகிப்து, பாபிலோன் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் என்று தெரியுமா? பல நூறு வருடங்களுக்கு முன்னர் தமிழ் கலாச்சாரம்தான் எகிப்து தேசத்திற்கு சென்றது. எகிப்திய ஜனங்கள் அதை ரோம் தேசத்திற்கு எடுத்து சென்றார்கள். அதன்பிறகு கிரேக்க மக்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள். பிறகு வடக்கு வழியாக திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். பின்னர் தமிழ் கலாச்சாரம் ஜப்பானுக்கு சென்றது. பின்னர் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் தமிழ் மொழியானது வேறு எந்த மொழியுடனும் ஒத்துப்போவதில்லை. ஆங்கிலேயர்கள் இந்த பெயர்களையெல்லாம் மாற்றி விட்டனர். அதனால்தான் நாம் யார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. தெலுங்கு என்ற பெயர் தங்களுக்கு எப்படி வந்தது என்று … Read entire article »

பற்று

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்று வள்ளுவர் கூறியதின் பொருளாவது ஆசை அல்லது பற்றை விடுவதற்கு எல்லா பொருள்களுக்கும் மூலகாரணராகிய ஆசை அல்லது பற்று அற்ற பரம்பொருளின் அழகிய பாதங்களை இறுகப் பிடித்துக்கொள் என்பதாகும். இறைவன் ஆசை அற்றவன் என்று ஒப்புக்கொள்ளலாம். பற்று இல்லாதவன் என்றால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? அவன் பற்றியிருப்பதினால்தானே வளியில் பூமி சுழன்று கொண்டிருக்கிறது, நட்சத்திரங்கள் தொங்கி கொண்டிருக்கின்றன, சூரியன் தொங்கி கொண்டிருக்கிறது. அத்துடன் அண்டசராசரத்திலுள்ள சகலமும் இறைவன் பற்றி பிடித்துக்கொண்டிருப்பதினால்தானே அவை தத்தம் இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த பற்றை புவிஈர்ப்பு சக்தி என்றார்கள். மெய்ஞானம் இதனை இறைவனின் கட்டுப்பாடு என்கிறது. அவ்வளவுதான்!!! திருக்குர்-ஆனும் இக்கருத்தை கூறுகிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்-ஆன் 13:2). நீங்கள் பார்க்கக்கூடிய தூணின்றி வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து … Read entire article »

படகோட்டி

ஸ்ரீ ராமனை உலகமே அறியும் எனும்படி அவன் மகிமை, பெருமை எங்கும் பரவியிருந்தது.  ராமன் காட்டிற்கு செல்லும்போது சீதை, லக்ஷ்மணனும் செல்கிறார்கள். கங்கை நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன்னே மரவுரி தரித்து நிற்கும் ராமனை காணமுடியாமல் அவன்  கண்களில் கண்ணீர் வருகிறது. என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா? என பக்தியோடு கேட்கிறான். கங்கையை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும் என்று ராமர் கூறுகிறார். அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்பட தயாராகிறது. ஓடக்காரனான கேவத் என்பவனை அணுகி, உன் படகை இங்கே கொண்டு வா என்று கூறினான். படகு மெதுவாக அவர்களை நெருங்கி வருகிறது. ஓடக்காரனிடம் இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜாவான ராமர், அவர் மனைவி சீதாதேவி ராணி, அவருடைய சகோதரன் லக்ஷ்மணன். இவர்களை அக்கரைக்கு கொண்டு சேர் என குகன் வேண்டுகிறான். கேவத் என்பவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும், இரவில் … Read entire article »